நள்ளிரவில் 2 மணிக்கு வந்த போன் கால்! பயத்தில் உடனே ஆஃப் செய்து வைத்த மயில்சாமி: அவரே கூறிய கதை
நடிகர் மயில்சாமி இன்று மாரடைப்பினால் உயிரிழந்த நிலையில், அவரைக் குறித்த பல தகவல்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
நடிகர் மயில்சாமி
தமிழ் சினிமாவின் முக்கிய நகைச்சுவை நடிகர்களில் ஒருவரான மயில் சாமி, தனது நடிப்பினை சிறப்பாக வெளிப்படுத்தியவர். சில ஆண்டுகளுக்கு முன்பு இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நிலையிலும் தொடர்ந்து சினிமாவில் நடித்து ரசிகர்களை மகிழ்ச்சியாக வைத்திருந்தார்.
நடிகர் மயில்சாமி தீவிர சிவன் பக்தர் என்பதால் மகாசிவராத்திரியை கொண்டாட சென்னையை அடுத்த கேளம்பாக்கத்தில் உள்ள சிவன் கோவிலுக்கு சென்று வந்த நிலையில் அதிகாலையில் ஏற்பட்ட திடீர் மாரடைப்பினால் உயிரிழந்துள்ளார்.
கொரோனா காலத்தில் மட்டுமின்றி தற்போது வரை பொது சேவைகள் அதிகமாக செய்து வந்த இவர், ஒரு லட்சம் சம்பளம் வாங்கினாலும் வீட்டிற்கு கொண்டு செல்வது ஐந்தாயிரம் மட்டும் தானாம். அந்த அளவிற்கு பிறருக்கு தானம் செய்துவிடுவாராம்.
திரையுலகினர், ரசிகர்கள், பிரபலங்கள் என பலரும் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தி வரும் நிலையில், இவர் இரவு நேரத்தில் போனை ஆ.ஃப் செய்து வைப்பது குறித்த தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
நள்ளிரவில் வந்த போன் கால்
சமீபத்தில் அவரே இதுகுறித்து கூறியிருந்த நிலையில், நான் எந்த நேரத்திலும் போன் வந்தாலும் எடுத்து பேசுவேன்... சிலர் விலையுயர்ந்த செல்போன் வைத்திருந்தாலு்ம் போனை எடுக்காமல் இருப்பார்கள்.
ஒரு நாள் நள்ளிரவில் 2 மணிக்கு ஒருவர் தனக்கு போன் செய்து எந்த நடிகையை எந்த நடிகர் வச்சிருக்கார் என்று கேட்ட நிலையில், யார் யாரை வைத்திருந்தால் எனக்கென்ன என்று கூறியதோடு, இரவு முழுவதும் தூங்காமல் எதற்காக இப்படியொரு நபர் போன் செய்தார் என்று சிந்தித்துக் கொண்டே இருந்துள்ளார்.
அதன் பின்பே இரவில் தனது மொபைல் போனை சுவிட்ச் ஆஃப் செய்துவிடுவதாக சமீபத்தில் இந்த கதையினைக் கூறியுள்ளார்.
அவர் கூறிய இந்த கதை அந்த தருணத்தில் சிரிப்பை ஏற்படுத்தியிருந்தாலும், தற்போது இதனை நினைவுகூறும் ரசிகர்களுக்கு கண்ணீருடனே சிரிப்பு வருகின்றது என்பது தான் மறுக்கமுடியாத உண்மை...
வீட்டிற்கு சென்றுவிட்டு வருகிறேன் என்று கூறி சென்ற அவர் கடைசியில் வராமலேயே சென்றுவிட்டார் என்பது ரசிகர்களை வேதனையில் ஆழ்த்தியுள்ளது.
You May Like This Video