இந்த நோயாளிகளின் உயிருக்கு எமனாகும் பிரட்! எந்த உணவுகளை சாப்பிடலாம்?
Hyper tension அல்லது உயர் இரத்த அழுத்தம் என்பது இன்றைய காலகட்டத்தில் பொதுவாக பலரிடம் காணப்படுகிறது. சில குறிப்பிட்ட உணவுகளை தவிர்ப்பதன் மூலம், உயர் ரத்த அழுத்தத்தை குறைக்கலாம் மற்றும் ஆரம்ப நிலையிலேயே குணப்படுத்த முடியும்.
பக்கோடா, பஜ்ஜி, வடை போன்ற சிற்றுண்டிகள் வாய்க்கு சுவையானதாக இருந்தாலும் ஆரோக்கியமானவை அல்ல. தினசரி உட்கொண்டால், அது ஆரோக்கியத்தை பாதிப்பதோடு, உயர் இரத்த அழுத்தத்தை ஏற்படுத்தி இதயத்தினையும் பாதிக்கின்றது.
எடை இழப்பிற்கு உதவும் உணவு மற்றும் குறைந்த சோடியம் உணவு, பொட்டாசியம், கால்சியம் உள்ள உணவுகள் ரத்த அழுத்தத்தின் உயர்வினைக் கட்டுப்படுத்தும். ஆனால் சில உணவுகள் ரத்த அழுத்தத்தினை வழிவகுக்கும் என்பதால் அவற்றினை தவிர்க்க வேண்டும். என்னென்ன உணவுகள் என்பதை இங்கே தெரிந்து கொள்ளலாம்.
காபி :
காபியில் காஃபின் அதிகமாக உள்ளதால் ரத்த அழுத்தம் அதிகரிக்க வழிவகுக்கும். எனவே உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் இதனை குறைத்துக் கொள்ள வேண்டும்.
உப்பு :
அதிக உப்பு உயர் ரத்த அழுத்தத்திற்கு நல்லதல்ல. ஊறுகாய் வத்தல் போன்றவற்றில் அதிக உப்பு இருக்கும். உணவு நீண்ட காலம் கெட்டுப் போகாமல் இருக்க உப்பு அதிகம் சேர்க்கப்படுகிறது. எனவே இதனை தவிர்க்கவும்.
பேக் செய்யப்பட்ட உணவு :
பேக் செய்யப்பட்ட உணவுகள் உயர் இரத்த அழுத்தம் அதிகரிக்க வழிவகுக்கும். புதிதாக சமைக்கபட்ட உணவை சாப்பிடுவது சுவையானது என்பதோடு ஆரோக்கியத்திற்கும் நல்லது.
சர்க்கரை:
சர்க்கரை அதிகம் எடுத்துக் கொண்டால், அது உயர் ரத்த அழுத்தம் மட்டுமல்ல. பல நோய்களுக்கு வழிவகுக்கும். உடல் பருமன், பல் பிரச்சனை, உயர் இரத்த அழுத்தம் போன்ற நோய்கள் சிலவற்றைக் குறிப்பிடலாம். சர்க்கரை உடல் பருமன் மற்றும் உயர் இரத்த அழுத்தத்திற்கு வழிவகுக்கும்.
பதப்படுத்தப்பட்ட இறைச்சி:
பதப்படுத்தப்பட்ட இறைச்சியில் சோடியத்தின் அளவு அதிகமாக இருக்கலாம். இறைச்சிகள் ஏற்கனவே தயாரிக்கப்பட்டு, பதப்படுத்தப்பட்டு உப்பு சேர்க்கப்பட்டுள்ளன. இதனுடன் சேர்ந்து வரும் சாஸ்கள், ஊறுகாய், சீஸ் அல்லது ரொட்டியில் உள்ள அதிக சோடியம் நிறைந்த உணவும் உடலுக்கு நல்லதல்ல
பிரெட்:
பிரெட் மைதாவால் ஆனது என்பதால் அது ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. மைதா உடல் எடை அதிகரிப்பதற்கு வழிவகுக்கும்.
பீனட் பட்டர்:
Peanut Butter எனப்படும் வேர்க்கடலை வெண்ணெய் ஆரோக்கியமானதல்ல. இது கொழுப்பின் அளவு அதிகரிக்க வழிவகுக்கும். மேலும் அதிக சோடியம் உள்ளதன் காரணமாகவும், இது மிகவும் தவிர்க்கப்பட வேண்டும். இருப்பினும், அதற்குப் பதிலாக உப்பு சேர்க்காத வேர்க்கடலை வெண்ணெய் பயன்படுத்தலாம்.