சர்க்கரையை வேகமாக குறைக்கும் சக்தி வாய்ந்த பழம்! ஒரு போதும் இந்த தவறை மட்டும் செய்யாதீங்க
பொதுவாக கோடைக்காலம் வந்தவுடன் உடல் சூடு அதிகமாக இருக்கும். அப்போது என்ன உணவுகள் எடுத்துக் கொள்ளலாம் என சந்தேகங்கள் இருக்கும்.
அந்தவகையில் உடல் எடையை கட்டுக்குள் வைப்பதற்கும் உடல் சூட்டை தனிப்பதற்கும் ஏற்ற பழமாக கிர்ணி பழம் பார்க்கப்படுகிறது.
மேலும் கிர்ணிப்பழத்தில் வைட்டமின் ஏ, ஈ, சி, பீட்டா கரோட்டின், பொட்டாசியம், மாங்கனீஸ் ஆகிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது.
இது உடலில் ஏற்படும் அனைத்து பிரச்சினைகளுக்கும் மருந்தாக பயன்படுகிறது.
அந்த வகையில் கிர்ணி பழத்தில் இருக்கும் மருத்துவ குறிப்புகள் குறித்து தெரிந்து கொள்வோம்.
கிர்ணி பழத்தால் இந்த நோய் கண்டிப்பாக சரியாகுமாம்!
1. சரும பிரச்சினை இருப்பவர்கள் இந்த கிர்ணிப்பழத்தை அடிக்கடி சாப்பிட்டால் வந்தால் இதிலிருக்கும் ஊட்டச்சத்துக்கள் இவற்றை சரியாக்கும்.
2. பார்வை குறைப்பாடு பிரச்சினை இருப்பவர்கள் அடிக்கடி எடுத்து கொள்வது சிறந்தது.
3. சிக்ரெட் பிடிப்பவர்களுக்கு ஏற்படும் நுரையீரல் பிரச்சினை ஓரளவு இந்த பழம் சரிச் செய்கிறது.
4. கிர்ணி பழத்தில் கிளைசிமிக் இன்டெக்ஸ் அளவு குறைவாக இருப்பதால் சர்க்கரை வியாதியுள்ளவர்களும் இந்த பழத்தை எடுத்து கொள்ளலாம். இவற்றால் எந்த பிரச்சினையும் ஏற்படாது.
5. வயிற்று கோளாறுகளுக்கு இயற்கை மருத்துவம் என்றால் அது கிர்ணி பழம் தான். இதிலிருக்கும் நார்ச்சத்துக்கள் இவற்றை ஒன்று விடாமல் சரிச் செய்கிறது.
முக்கிய குறிப்பு
கிர்ணி பழத்தை எடுத்து வெட்டி விட்டு அப்படியே வைத்து விடாதீர்கள். ஏனென்றால் இதிலிருக்கும் ஊட்டச்சத்துக்கள் ஆக்சிஜனிறக்கம் அடைந்து விடுகிறது.