20 வயதிலேயே தயாரிப்பாளர்: பிறந்த நாளை விமர்சையாக கொண்டாடிய ஜோவிகா!
நடிகை வனிதா விஜயகுமாரின் மகள் மற்றும் பிக்பாஸ் பிரபலம் ஜோவிகா தனது 20 ஆவது பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடி தற்போர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
வனிதா- ஜோவிகா
தமிழ் சினிமாவில் விஜய் நடிப்பில் வெளியான “சந்திரலேகா” படத்தில் மூலம் ஹீரோயினாக அறிமுமானவர் தான் வனிதா விஜயகுமார்.
அதனை தொடர்ந்து பெரியளவு படங்களில் நடிக்காமல் திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிய வனிதா முதல் திருமணம் விவாகரத்தில் முடியவே, நீண்ட நாட்களுக்கு பின்னர் 3 திருமணங்கள் செய்து விட்டு சர்ச்சை நாயகியாகவே மாறினார்.
ஆனால் தற்போது சிங்கிளாக தனது 2 பெண்குழந்தைகளுடன் வாழ்ந்து வருகின்றார். சினிமா பிரேக் கொடுத்து விட்டு, சீரியல், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் என பிஸியாக இருந்த வனிதா விஜயகுமார் தற்போது இவரே இயக்கி Mrs & Mr எனும் படத்தில் நடித்திருந்தார்.இந்த படம் அண்மையில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது.
வனிதா மகள் ஜோவிகா
வனிதாவின் மகன் ஸ்ரீஹரி தாத்தா, அப்பாவின் அரவணைப்பில் இருக்கிறார். அவர் வனிதாவுடன் பேசுவதில்லை. வனிதா, மகள்கள் ஜோவிகா மற்றும் ஜெயினிதாவுடன் வசித்து வருகிறார்.
வனிதாவின் மூத்த மகள் ஜோவிகா பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு மக்கள் மத்தியில் பிரபல்யம் ஆனார். அதனை தொடர்ந்து நடிகர் மற்றும் இயக்குநர் பார்த்திபனிடம் உதவி இயக்குநராக பணியாற்றினார்.
பின்னர் தனது தாய் வனிதா மற்றும் ராபர்ட் மாஸ்டரை வைத்து Mrs & Mr எனும் படத்தை ஜோவிகா தயாரித்துள்ளார். இளம் வயது தயாரிப்பாளர் என்று பாராட்டுகளையும் ஜோவிகா பெற்றார்.
இந்நிலையில் ஜோவிகா தனது 20 ஆவது வயது பிறந்தநாளை வெகுவிமர்சையாக கொண்டாடிய புகைப்படங்களை தற்போது வெளியிட்டுள்ளார். குறித்த புகைப்படங்கள் இணையத்தில் லைக்குகளையும் வாழ்த்துக்களையும் குவித்து வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |