இந்த பழக்கத்தை வைச்சிக்கோங்க... தலைமுடி நன்றாக வளரும்- அன்னம் சீரியல் நடிகை கொடுத்த டிப்ஸ்
அன்னம் சீரியல் நாயகி அபிநட்சத்திரா அவருடைய தலைமுடி எப்படி அவ்வளவு நீளமாக வளர்த்து வைத்திருக்கிறார் என்பதற்கு பேட்டியொன்றில் கூறிய டிப்ஸ் ரசிகர்களின் கவனத்திற்கு சென்றுள்ளது.
வழக்கமாக சீரியல் நடிகைகள் மற்றும் சினிமா நடிகைகளை பார்த்து தான் பெண்கள் தங்களை அப்படி வடிவமைக்க வேண்டும் என ஆசைப்படுவார்கள்.
சினிமா நடிகைகளை விட சீரியல் நடிகைகள் வீட்டிலுள்ள பெண்களுக்கு அதிகமாக இணைக்கப்படுகிறார்கள்.
உதாரணமாக அவர்கள் சீரியலில் போடும் புடவைகள், அணிகலன்கள், ஹேர் ஸ்டைல்கள் பெண்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது. அதிலும் குறிப்பாக இன்னும் சிலர் கொஞ்சம் அதிகமாக சென்று சீரியல் நடிகைகளின் கதாபாத்திரங்கள் போன்று தன்னை நினைத்துக் கொண்டு தன்னுடைய வாழ்க்கையை வாழ்ந்துக் கொண்டிருக்கிறார்கள்.
இந்த பழக்கம் அவசியம்..
இந்த நிலையில், அன்னம் சீரியலில் நாயகியாக நடித்து வரும் அபிநட்சத்திராவிற்கு அந்த சீரியலில் நீளமாக தலைமுடி இருக்கும். அவருக்கு சீரியலில் மாத்திரமல்ல நிஜ வாழ்க்கையிலும் நீளமாக தான் தலைமுடி இருக்கிறது.
இது குறித்து பேட்டியொன்றில் கேட்ட போது அவருடைய தாத்தா கூறிய ஹேர் டிப்ஸை பகிர்ந்துள்ளார்.
அதாவது,“ நாம் வழக்கமாக சாப்பிடும் பொழுது சாப்பாட்டில்உள்ள கறிவேப்பிலை, தக்காளி ஆகியவற்றை தனியாக ஒதுக்கி வைப்போம். இன்னும் சிலர் குப்பையில் போடுவார்கள். என்னுடைய தாத்தா அதனை சாப்பிட கூறுவார். அது உடலுக்கு நல்லது என அவர் கூறினார். அதனால் நான் சாப்பாட்டில் கறிவேப்பிலை, தக்காளி ஆகியவற்றை சாப்பிடுவேன். இதுதான் என்னுடைய தலைமுடி வளர்ச்சிக்கான ரகசியம்..” எனக் கூறியுள்ளார்.
இந்த காணொளி இணையவாசிகளின் கவனத்திற்கு சென்றுள்ளது. அதில் சிலர், “ வேறு எதுவும் உள்ளதா?” எனக் கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |