ரயில் பெட்டியின் பின்னால் இருக்கும் X குறியீடு - இதற்கு என்ன அர்த்தம் தெரியுமா?
ரயில் சென்று முடிந்த பின்னர் இதன் கடைசி பெட்டியில் இருக்கும் X என்ற மிகப்பெரிய எழுத்து இருப்பதற்கு என்ன காரணம்.
X என்ற குறியீடு
பொதுவாக ரயில் பெட்டிகளில் X என்ற குறியீடு எழுதியிருப்பதை பார்த்திருப்போம். சிலர் இதை பார்த்திருக்க மாட்டார்கள்.
ஆனால் இந்த எழுத்திற்கான காரணம் என்னவாக இருக்கும் என்பதை யாராவது யோசித்தது உண்டா. இந்திய ரயில்வே புள்ளிவிபரங்களின் அடிப்படையில் தினமும் சுமார் 22,593 ரயில்கள் இயங்கும்.
இந்த ரயில்களில் சுமார் 13,452 ரயில்கள் பயணிகளுக்காக இயங்கும். இதில் பயணிகளின் வேண்டிய இடத்திற்கு பயணம் செய்யலாம். இதில் எஞ்சிய ரயில்கள் சரக்கு ரயில்களாம்.
இதில் ஒரு நாளைக்கு ரயிலில் சுமார் 2 கோடியே 40 லட்சத்திற்கும் அதிகமான பயணிகள் பயணிக்கின்றனர். ரயிலில் செல்வது யாருக்கு தான் பிடிக்காது.
இப்படி இருக்க பெட்டியின் கடைசி பெட்டியில் X என்ற எழுத்து பெரிய வடிவில் எழுதப்பட்டிருக்கும். இது ரயில் நிலையத்தை விட்டு ஒரு ரயில் கடந்து செல்லும் போது அங்குள்ள அதிகாரிகள் பெட்டியில் இந்த "X" குறியீடு இருக்கிறதா என்பதை பார்ப்பார்கள்.
இந்த குறியீடை அவர்கள் சரிபார்க்க காரணம் ரயில்களில் இந்த குறியீடு இருந்தால், ரயில் முழுவதும் எந்தப் பெட்டியும் வழியில் கழன்றுவிடாமல் பாதுகாப்பாக வந்துள்ளது என்பது உறுதியாகும்.
ஒருவேளை ரயில் பெட்டிகளில் இந்த குறியீடு இல்லாவிட்டால் அந்த ரயில் அவசரநிலையில் உள்ளது என்பதை அறிந்து கொள்வார்கள். அதாவது அந்த ரயிலின் கடைசிப் பெட்டி வழியில் எங்கோ கழன்று விழுந்துவிட்டது என்பதை அறிந்து கொள்வார்கள்.
இதன் மூலம், பின்னால் வரும் ரயில்கள் மோதி விபத்து ஏற்படுவதைத் தடுக்க அவசர நடவடிக்கைகள் எடுக்கப்படும். இதன் காரணமாக தான் ரயில்கக்கு பின்னால் X என்ற எழுத்து போடப்பட்டிருக்கிறது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |