ஆரோக்கியமான சுவையான சிமிலி உருண்டை.. வீட்டிலேயே அசத்தலாக செய்வது எப்படி?
பொதுவாக குழந்தைகள் அதிகமாக இருக்கும் வீடுகளில் சமைக்கும் ஒவ்வொரு உணவும் சத்தானதாக இருக்க வேண்டும் என அம்மாக்கள் பார்த்து பார்த்து சமைப்பார்கள்.
குழந்தைகளுக்கு சிறுவயதில் கொடுக்கும் உணவுகளில் ஏதாவது கோளாறு ஏற்பட்டால் அவர்களின் இளமைக்காலம் அதிகமாக பாதிக்கப்படும்.
இதன்படி, வீட்டிலுள்ள குழந்தைகள் உணவில் அதிகளவு நாட்டம் காட்டவில்லையென்றால் உழுந்து, அரிசி, மா என சத்தான பொருட்களை சேர்த்து களி போல் செய்து கொடுக்கலாம்.
இது உடலுக்கு தேவையான சக்தியை கொடுத்து குழந்தைகளை ஆரோக்கியப்படுத்தும்.
அந்த வகையில் குழந்தைகளின் வளர்ச்சியை அதிகப்படுத்தும் சிமிலி உருண்டை எப்படி செய்வது என தொடர்ந்து பார்க்கலாம்.
உருண்டைக்கு தேவையான பொருட்கள்
- கேழ்வரகு (ராகி) மாவு - 250 கிராம்
- வெல்லம் -300 கிராம்
- வேர்கடலை - 200 கிராம்
- ஏலக்காய்- 4
- நம்பர் நெய் - தேவையான அளவு
- உப்பு- ஒரு சிட்டிகை
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் வேர்கடலையை போட்டு நன்றாக வறுக்கவும். பின்னர் வறுத்த கடலைகளை ஒரு சுத்தமான தண்ணீர் இல்லாத மிக்ஸி சாரில் போட்டு அரைக்கவும்.
இதனை தொடர்ந்து ஒரு பவுலில் கேழ்வரகு மா, உப்பு, தண்ணீர் ஆகியவற்றை சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும்.
பின்னர் பிசைந்த மாவை தோசை தவாலில் எண்ணெய் விட்டு ரொட்டு போன்று தட்டி எடுக்கவும்.
இது ஒரு புறம் இருக்கையில், வெல்லத்தை பொடித்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
பாத்திரத்தில் பொடித்த வெல்லம், பொடித்த வேர்கடலை, வேகவைத்து பொடித்த ராகி ரொட்டிகளையும் அதனுடன் சேர்க்க வேண்டும்.
கடைசியாக ஏலக்காய் பொடி, 3 கரண்டி நெய் சேர்த்து நன்றாக உருண்டை பதத்திற்கு பிடிக்கவும்.
இந்த ரெசிபி சரியாக பின்பற்றினால் சுவையான மற்றும் ஆரோக்கியமான சிமிலி உருண்டை தயார்!
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |