பிக் பாஸ் 9ன் தொகுப்பாளர் யார் தெரியுமா? போட்டியாளராக குக் வித் கோமாளி பிரபலம்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாக இருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் குக் வித் கோமாளி பிரபலம் ஒருவர் கலந்து கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிக் பாஸ்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி நிகழ்ச்சி தான் பிக் பாஸ். தற்போது 8 சீசன் முடிவடைந்துள்ள நிலையில் 9வது சீசனுக்கான போட்டியாளர்களின் தேர்வு நடைபெற்று வருகின்றது.
கடந்த 7 பிக் பாஸ் சீசன்களை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கியிருந்த நிலையில், 8வது சீசன் நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கினார்.
கமல்ஹாசனைப் போன்று இவருடைய சீசன்களிலும் நல்ல வரவேற்பு கிடைத்தது. இவரது பேச்சு, போட்டியாளர்களை கையாளும் முறை அனைத்தும் மக்களுக்கு அதிகமாகவே பிடித்திருந்தது.
கடந்த வருடம் ஒளிபரப்பாக பிக் பாஸ் சீசன் 8ல் முத்துக்குமரன் டைட்டில் வின்னராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் பிக் பாஸ் சீசன் 9 வரும் அக்டோபர் மாதம் பிரம்மாண்டமாக தொடங்க உள்ளது.
குக் வித் கோமாளி போட்டியாளர்
இந்நிலையில் இந்த சீசனையும் நடிகர் விஜய்சேதுபதி தொகுத்து வழங்க உள்ளதாக, ஜியோ ஸ்டாரின் தென்னிந்திய தலைமை அதிகாரியான கிருஷ்ணன் குட்டி பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
தற்போது பிக் பாஸ் 9வது சீசனுக்கான ஆடிஷன் தொடங்கியுள்ளதாக தகவல் வெளியான நிலையில், அமரன் படத்தில் நடித்து தற்போது குக் வித் கோமாளி கலந்து கொண்டு கலக்கிவரும் உமைர் பிக் பாஸில் கலந்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |