முறுக்கு செய்ய அரிசி மாவு அரைச்சு கஷ்டப்பட வேண்டாம்! ஈஸியா செய்யலாம்... எப்படி தெரியுமா?
நொறுக்கு தீனி என்றாலே பலருக்கு நாவில் எச்சில் ஊற ஆரம்பித்து விடும்.
அதிலு முறுக்கு பிரியர்கள் அதிகம்.
முறுக்கில் பல வகை முறுக்கு உள்ளது.
இன்று நாம் அரிசி மாவு அரைச்சு கஷ்டப்படாமல் கடையில் வாங்கிய அரிசி மாவை வைத்து சுவையான முறுக்கு எப்படி செய்யவது என்று பார்க்கலாம்.
மொறு மொறுப்பான முறுக்கு
- அரிசி மா – 2 கிலோ
- கடலை மாவு – 500 கிராம்
- பொட்டுக்கடலை – 500 கிராம்
- எள்ளு – தேவையான அளவு
- ஓமம் – தேவையான அளவு
- எண்ணெய் – தேவையான அளவு
- வெண்ணெய் – தேவையான அளவு
- உப்பு – தேவையான அளவு
- கருவேப்பிலை – தேவையான அளவு
- சீரகம் – 1 தேக்கரண்டி
- காய்ந்த மிளகாய் – தேவையான அளவு
செய்முறை
கடையில் வாங்கிய அரிசி மாவுடன், கடலை மாவு சேர்த்து கொள்ளுங்கள்.
பிறகு 500 கிராம் பொட்டுக்கடலையை அரைத்து அதில் கலந்து கொள்ள வேண்டும்.
மிளகாய், சீரகம், உப்பு மற்றும் கருவேப்பிலை சேர்த்து தனியாக அரைத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் அரிசி மாவுடன் அவற்றை சேர்த்து நன்றாக கலக்க வேண்டும்.
அதனுடன் தேவையான அளவு எள்ளு, ஓமம் எடுத்து கைகளில் அழுத்தி தேய்த்தது சேர்த்து கலக்க வேண்டும்.
வெண்ணெய் சேர்த்து சிறிது நேரம் கலக்கினால் போதுமானது. பாத்திரத்தில் எண்ணெயை காயவைத்து முறுக்கு பிழிந்து விடவும்.
பிறகு எடுத்து சுவைக்கவும்.