நல்லூர் கந்தனை காண படையெடுக்கும் சிங்களவர்.. இன்றைய தினம் என்ன சிறப்பு தெரியுமா?
யாழ். நல்லூர் கந்தனை காண இலங்கையில் தனித்து வாழ நினைக்கும் சிங்கள மக்கள் வருகை தருவது தமிழர்கள் மத்தியில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
நல்லூர் கந்தனின் மகிமை
வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் ஆரம்பமாகி இன்றுடன் 20 நாட்களை கடந்துள்ளது.
நல்லூர் கந்தனின் வருடாந்த மகோற்சவம் கடந்த 29ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. தொடர்ந்து 25 நாட்கள் சிறப்பு வழிபாடுகள் இடம்பெற்று சப்பரம், தேர் மற்றும் தீர்த்த திருவிழாக்களுடன் நல்லூர் கந்தனின் உற்சவம் இனிதே நிறைவுறும்.
செங்குந்தர் பரம்பரையினரால் நல்லூர் ஆலயக் கொடியேற்றத்திற்கான கொடிச்சீலை சம்பிரதாயப் பூர்வமாக ஆலயத்தில் ஒப்படைக்கப்படுவது பாரம்பரிய வழக்கமாக பார்க்கப்படுகிறது.
மேலும், வெகு விமர்சையாக நடந்து கொண்டிருக்கும் திருவிழாவை காண இலங்கை உட்பட வெளிநாடுகளில் இருந்து பக்தர்கள் வருகை தருகிறார்கள். அதிலும் குறிப்பாக இலங்கையில் தனித்து வாழ நினைக்கும் சிங்களவர்களும் வருகை தருவதை காணக் கூடியதாக உள்ளது.
அவ்வளவு சிறப்பு வாய்ந்த கோயில் யாழ் மண்ணில் இருப்பதை நினைத்து தழிழர்கள் பெருமைக் கொள்கின்றனர். நினைத்த காரியத்தை நடத்தி கொடுப்பதற்கு யாழ். மண்ணில் வீட்டிருக்கும் முருகன் பெயர் பெற்றவராக இருக்கிறார்.
இன்னும் 5 நாட்களுக்கு திருவிழா தொடர்ந்து நடக்கும் என்பதால், கந்தனை காண ஆயத்தமாக இருப்பவர்களும் வந்து பூஜையில் கலந்து கொண்டு ஆசியை பெற்றுக் கொள்ளலாம்.
இது தொடர்பில் மேலதிக தகவல்களை எமது காணொளியில் நீங்கள் விவரமாக பார்க்கலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |