பிறந்து 6 மாதம் வரை குழந்தைகளுக்கு தண்ணீர் கொடுக்கக்கூடாது ஏன்?
பொதுவாக மனிதர்களின் ஆரோக்கியத்திற்கு முக்கியமாக தண்ணீர் தேவைப்படுகின்றது. தேவையான அளவு தண்ணீர் பருகாவிட்டால் உடம்பில் பல பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். தாகத்தினை தீர்க்கும் பானமாக தண்ணீர் இருப்பது தவிர, இதில் சுவை எதுவும் கிடையாது.
ஆனால் பிறந்த குழந்தைகளுக்கு 6 மாதங்கள் வரை தண்ணீர் கொடுக்கக்கூடாது என்று மருத்துவர்கள் பரிந்துரைப்பதற்கான காரணம் நம்மில் பெரும்பாலான நபர்களுக்கு தெரிவதில்லை. இதற்கு காரணத்தினை தற்போது தெரிந்து கொள்ளலாம்.
குழந்தைகளுக்கு ஏன் தண்ணீர் கொடுக்கக்கூடாது?
பிறந்த குழந்தைகளுக்கு தாய்பால் மட்டுமே கொடுக்க வேண்டும். ஊட்டசத்து மிகுந்த திரவங்கள் கொடுக்க வேண்டும் என்பதால் தண்ணீர் கொடுக்க தேவையில்லை.
மேலும் பிறந்த குழந்தைகளின் உடல் உறுப்புகள் சரியாக வளர்ச்சியடையாமல் இருக்கும். வளர்ச்சியடையாத சிறுநீரகம் சத்து இல்லாத திரவத்தினை நாம் கொடுக்கும் போது செயலிழப்பு ஏற்படுவதுடன், செரிமான பிரச்சினையும் ஏற்படுகின்றது.
பிறந்த குழந்தைகளின் வயிற்றில் வெறும் 5 அல்லது 10 மில்லி அளவிற்கே உணவுக்கு இடம் இருக்கும். இதில் சத்துக்கள் இல்லாத தண்ணீரைக் கொண்டு நிரப்பினால் குழந்தையின் வளர்ச்சி பாதிக்கும்.
ஆனால் 6 மாதத்திற்கு பின்பு குழந்தையின் வளர்ச்சிக்கு ஒவ்வொரு நாளுக்கு அரை கப் அளவு தண்ணீர் கொடுக்க வேண்டும். ஆதலால் 6 மாதத்திற்கு முன்பு தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டுமே தவிர வேறு எந்த உணவுகளும் கொடுக்க வேண்டாம்.