இனி வீட்டிலேயே எள் உருண்டை செய்து சாப்பிடலாம்: உடல் எடையை இலகுவாக குறைக்கலாம்
பொதுவாகவே எள்ளில் நிறைய சத்துக்கள் உள்ளன. அது உடலிலுள்ள கொழுப்பை குறைப்பதில் முக்கிய பங்காற்றுகின்றது.
எள் உடல் எடையைக் குறைப்பதற்கு மிகச் சிறந்ததொரு பொருளாகும்.
இனி எள் உருண்டை எவ்வாறு செய்யலாம் எனப் பார்ப்போம்.
image - 24chakra.com
தேவையான பொருட்கள்
வெள்ளை எள் - 1/2 கிலோ
நெய் - 2 மேசைக்கரண்டி
வெல்லம் - 1/2 கிலோ
பொடித்த ஏலக்காய் - 1 தேக்கரண்டி
செய்முறை
முதலில் எள்ளை ஒரு பாத்திரத்தில் போட்டு வறுக்கவும். எள் பொன்னிறமாக மாறும்வரை விடாமல் கிளறவும்.
எள் கருகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். வறுக்கப்பட்ட எள்ளை மிக்சியில் போட்டு பொடித்துக் கொள்ளவும்.
வெல்லத்தை நன்றாக பொடித்து தூளாக்கிக் கொள்ளவும். பின்னர் ஒரு பாத்திரத்தில் நெய் ஊற்றி வெல்லத்தை அதில் கொட்டவும்.
வெல்லப் பாகு வந்ததும் அடுப்பை அணைத்துவிட வேண்டும். பின்னர் அதனுடன் ஏலக்காயையும் பொடித்த எள்ளையும் சேர்த்து கிளற வேண்டும்.
அதன் பின்னர் சிறு சிறு உருண்டைகளாக பிடித்தால் எள் உருண்டை தயார்.