Siragadikka Aasai: Hostel-ல் சேர்க்கப்பட்ட க்ரிஷ்... மீனா கண்ணில் சிக்கிய பாட்டி
சிறகடிக்க ஆசை சீரியலில் க்ரிஷை ரோகினி ஹாஸ்டலில் சேர்த்துள்ள நிலையில், மீனாவின் கண்ணில் அவரது பாட்டி சிக்கியுள்ள ப்ரொமோ காட்சி வெளியாகியுள்ளது.
சிறகடிக்க ஆசை
சிறகடிக்க ஆசை சீரியல் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக சென்று கொண்டிருக்கின்றது. இந்த சீரியலில் பல சீக்ரெட்டை மறைத்து கதைகளம் சென்று கொண்டிருக்கின்றது.
மீனா முத்து இருவரும் தனக்கு வரும் இன்னல்களை அடுத்தடுத்த சமாளித்து வரும் நிலையில், தற்போது க்ரிஷ் ரோகினியின் பிரச்சனை சென்று கொண்டிருக்கின்றது.
க்ரிஷின் பாட்டி மருத்துவமனையிலிருந்து வெளியேறிய நிலையில், அவர் தற்போது மீனாவின் கண்ணில் சிக்கியுள்ளார்.
தான் இல்லையென்றால் க்ரிஷை ரோகினி நன்றாக பார்த்துக் கொள்வார் என்று தான் மருத்துவமனையிலிருந்து பாட்டி வெளியேறினார்.
ஆனால் ரோகினி தற்போது க்ரிஷை பள்ளியிலிருந்து நிறுத்தியதுடன், அவரை ஹாஸ்டலில் கொண்டு விட்டுள்ளார்.
தற்போது மீனாவின் கண்ணில் பட்ட பாட்டியால் ரோகினியின் உண்மை அம்பலமாகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |