நாவிற்கு சுவையான சிவப்பரிசி காரப்பணியாரம்! மாவை இப்படி பினைந்தால் தான் சரியாக வருமாம்..
பொதுவாக வீடுகளில் பண்டிகை வந்து விட்டால் சிவப்பு அரிசியை பயன்படுத்தி நிறைய இனிப்பு வகைகள் செய்யலாம்.
ஏனெனில் இந்த பலங்காரங்களில் அதிகமான புரதச்சத்து இருக்கிறது. மேலும் உடலின் சீரான இயக்கத்திற்கு, திசுக்களின் வளர்ச்சிக்கு இந்த சத்துக்கள் உருதுணையாக இருக்கிறது.
இந்த பலங்காரங்களில் காலையுல் தேநீருடன் எடுத்து கொண்டால் காலையில் உற்சாகம் இருக்கும். மேலும் நமது வேலைகளை உற்சாகத்துடன் செய்து கொள்ளலாம்.
அந்த வகையில் சிவப்பரிசியை வைத்து சுவையான காரப்பணியாரம் எப்படி செய்வது என்பது குறித்து தெரிந்து கொள்வோம்.
தேவையான பொருட்கள்
சிவப்பு அரிசி - ஒரு பவுல்
உளுந்து - அரை பவுல்
வெந்தயம் - ஒரு கரண்டி
வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 2
இஞ்சித் துருவல் - சிறிய துண்டு
கடுகு, உளுத்தம் பருப்பு - கால் கரண்டி
கறிவேப்பிலை, தேங்காய் துருவல் - சிறிதளவு
எண்ணெய், உப்பு - தேவையான அளவு
தயாரிப்பு முறை
முதலில் சிவப்பு அரிசியை அளவாக எடுத்து கழுவி வைத்து விட்டு பின்னர் உளுந்து, வெந்தயம் என்பவற்றை எடுத்து தனித்தனியாக 3 மணித்தியாலம் வரை ஊற வைக்க வேண்டும்.
ஊறியதும், மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்து சுமார் 4 - 5 மணித்தியாலங்கள் வரை புளிங்கி விட வேண்டும்.
இதனை தொடர்ந்து பணியாரத்திற்கு தேவையானளவு எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில், கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை, இஞ்சித் துருவல் போட்டு தாளித்த பின்னர் பச்சை மிளகாய், வெங்காயம், தேங்காய் துருவல் ஆகியவற்றை சேர்த்து வதக்கி அதனை அந்த மாவில் சேர்த்து கொள்ளவும்.
குழிபணியார கல்லை வைத்து சூடானதும் எண்ணெய் விட்டு மாவை குழி குழியாக ஊற்றி எடுக்கவும். இருபுறமும் வேக விட்டு இறக்கினால் சிவப்பு அரிசி காரப் பணியாரம் தயார்!