சிவப்பு அரிசியில் இவ்வளவு நன்மைகளா?
நாம் பல அரிசி வகைகளை சாப்பிட்டிருப்போம். அந்த வகையில் சிவப்பு அரிசியும் அதில் அடங்கும். சிவப்பு அரிசியை உண்பதால் உடலுக்கு பல்வேறு நன்மைகள் ஏற்படுகின்றன.
இனி சிவப்பு அரிசியின் நன்மைகளைப் பற்றி பார்ப்போம்...
உடற்பருமன் அதிகமாக இருப்பது தற்போது பலரின் பிரச்சினையாக இருக்கிறது. அதனால் உடல் எடையைக் குறைக்க வேண்டும் என்று எண்ணுபவர்கள் விரைவில் எடையைக் குறைக்க சிவப்பு அரிசி இடியப்பம், புட்டு என்பவற்றை அதிகமாக உண்ணலாம். இதிலுள்ள வேதிப்பொருட்கள் பசி ஏற்படுவதை கட்டுப்படுத்தும்.
கோடை காலங்களில் உடல் சூடு அதிகரித்துவிடும். அதனால் உடலிலுள்ள அத்தியாவசிய சத்துக்கள் வியர்வை வழியாக வெளியேறும். இதன்போது சிவப்பு அரிசியுடன் நாட்டு சர்க்கரை சேர்த்து சாப்பிட வேண்டும். இதனால் உடல் குளிர்ச்சியடையும்.
சிவப்பு அரிசி உணவுகளில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால், அதை சாப்பிடும்பொழுது செரிமானத்துக்கு சுலபமாக இருக்கும்.
புரதச்சத்து அதிகமுள்ள ஒரு தானியமாக சிவப்பு அரிசி இருப்பதால், அதை உண்ணும்பொழுது உடலின் சீரான இயக்கத்துக்கும் உதவுகிறது.
குழந்தைகளுக்கு சிவப்பரிசி இட்லி, கஞ்சி போன்றவற்றைக் கொடுக்கும்பொழுது நல்ல உடல் மற்றும் மன ஆரோக்கியம் கிடைக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும்.
சிவப்பு அரிசியினால் செய்யப்பட்ட உணவுகள் நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் நல்லது.
பாலூட்டும் தாய்மார்களுக்கு சிவப்பு அரிசியால் செய்த உணவுகளைக் கொடுத்தால், தாய்ப்பால் அதிகமாக சுரக்கும்.
இரத்த கொதிப்பு, இரத்த அழுத்தம் இருப்பவர்கள் சிவப்பு அரிசியில் செய்த உணவுகளை உண்டால் உயர் இரத்த அழுத்தம் போன்றவை ஏற்படும் வாய்ப்பை தடுக்கலாம்.