மாவு அரைச்சு கஷ்டபட தேவையில்லை! மொறு மொறு சுவையில் சுவையான பணியாரம் செய்யலாம்
நீங்கள் பணியாரத்தை விரும்பி சாப்பிடுபவரானால் உங்களுக்காக ஒரு ஈஸியான பணியார ரெசிபியைப் பற்றி தான் இப்போது பார்க்கப் போகிறோம்.
இந்த பணியாரத்திற்கு மாவு எதையும் தனியாக அரைக்க வேண்டிய அவசியமில்லை.
வீட்டில் மைதா, சர்க்கரை இருந்தால் போதும், அதைக் கொண்டே ஒரு சுவையான பணியாரம் செய்யலாம்.
தேவையான பொருட்கள்
- மைதா - 1 கப்
- சர்க்கரை - 1/2 கப்
- சமையல் சோடா - 1/2 டீஸ்பூன்
- ஏலக்காய் பொடி - 1/2 டீஸ்பூன்
- பால் - தேவையான அளவு
- எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் மைதா, சர்க்கரை, சமையல் சோடா, ஏலக்காய் பொடி மற்றும் தேவையான அளவு பால் சேர்த்து ஓரளவு கெட்டியாக, கட்டிகளின்றி நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும்.
எண்ணெய் சூடானதும், ஒரு ஸ்பூன் மாவை எடுத்து எண்ணெயில் ஊற்றி பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும்.
இதேப் போல் அனைத்து மாவையும் பொரித்து எடுத்தால், சீனி பணியாரம் தயார்.