வெறும் ஒரு இஞ்சி தேநீரில் இவ்வளவு பிரச்சினை இருக்கா? சர்க்கரை வியாதியுள்ளவர்கள் குடிக்கலாமா?
பொதுவாக சர்க்கரை வியாதியுள்ளவர்கள் இந்த உணவை தான் சாப்பிட வேண்டும் இதனை சாப்பிட கூடாது என ஒரு கட்டுபாடு இருக்கிறது.
இதனை மீறும் பட்சத்தில் அவர்களின் உடம்பில் இருக்கும் சர்க்கரையின் அளவு அதிகரிக்கும்... அல்லது குறையும்.
அந்த வகையில் சர்க்கரை நோயுள்ளவர்கள் இஞ்சி கலந்த உணவுகளை எடுத்து கொள்ளக் கூடாது என மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளார்கள்.
இப்படியான ஒரு நிலைமையில் இது தொடர்பான பூரண விளக்கத்தை தொடர்ந்து பார்க்கலாம்.
சர்க்கரை வியாதியுள்ளவர்கள் இஞ்சி டி குடிக்கலாமா?
1. பொதுவாக இஞ்சி சிலருக்கு அலற்சி, குமட்டல், வயிற்றுபோக்கு இது போன்ற பிரச்சினைகளை உருவாக்கும் இதனால் இஞ்சி கலந்து தேநீர்களை முடிந்த வரை குறைத்து கொள்ள வேண்டும்.
2. இஞ்சி கலந்த தேநீரில் குடிப்பதால் அது அமிலத்தன்மையை வயிற்றில் அதிகப்படுத்தி செரிமான பிரச்சினையை உருவாக்குகிறது. இதனை தான் நாம் அசிடிட்டி என அழைக்கிறோம்.
3. அறுவை சிகிச்சை செய்தவர்கள் இந்த இஞ்சி கலந்த உணவுகளை முற்றிலும் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் இஞ்சியில் இருக்கும் அமில தன்மை வேறு ஏதாவது பிரச்சினை உருவாக்கும்.
4.பித்தப்பை கல் இருப்பவர்கள் இஞ்சி கலந்த தேநீரை தினமும் குடித்து வந்தால் காலப்போக்கில் கல்லை அதிகப்படுத்தி பாரிய வருத்தத்தை நமக்கு தருகிறது. இதனால் கடுமையான வலி ஏற்பட்டு உயிருக்கு கூட ஆபத்தை விளைவிக்கும்.
5. கர்ப்பிணி பெண்களுக்கு ஹார்மோன்கள் மாற்றத்தினால் குமட்டல்கள், வாந்தி பிரச்சினை இருக்கும் இஞ்சியின் வாசனை சிலருக்கு பிடிக்காமல் இருக்கலாம். இப்படியான ஒரு நிலைமையில் இவர்கள் இஞ்சி கலந்த தேநீர் கொடுத்தால் வாந்தி எடுத்து மயக்கமடையவும் வாய்ப்பு இருக்கிறது.