சோடா சேர்க்காமல் சுவையான பச்சரிசி அப்பம்! சுகர் நோயாளிகளும் விரும்பி ருசிக்கலாம்
சுகர் நோயாளிகள் உணவு விடயத்தில் அக்கறை செலுத்த வேண்டும்.
வீடே மணக்கும் அளவுக்கு குடும்பத்தினர் அனைவரும் ருசிக்கும் போது உங்களுக்கு மட்டும் உணவு கட்டடுப்பாடு என்றால் கஷ்டமாக தான் இருக்கும்.
ஆனால் குடும்பத்தாருடன் சேர்ந்து சர்க்கரை நோயாளிகளும் சாப்பிடக்கூடிய பல சுவையான உணவுகள் இருக்கின்றது.
அதில் பச்சரிசி அப்பமும் ஒன்று. இன்று வெறும் பச்சரிசி, உளுந்து, வெந்தயம் ஆகிய மூன்று பொருட்களை மட்டுமே கொண்டு சுவையான அப்பம் சுடலாம்.
பச்சரிசி அப்பம் செய்ய தேவையான பொருட்கள்
- பச்சரிசி – ஒரு கப்
- உளுந்து – ஒரு கப்
- வெந்தயம் – ஒரு டீஸ்பூன்
- இட்லி அரிசி – ஒரு கப்
பச்சரிசி அப்பம் செய்முறை
ஒரு கப் இட்லி அரிசி மற்றும் பச்சரிசி எடுத்து தண்ணீரில் நன்கு கழுவுங்கள். பிறகு தண்ணீர் ஊற்றி அவற்றுடன் ஒரு டீஸ்பூன் அளவிற்கு வெந்தயம் மற்றும் உளுந்து சேர்த்து நன்கு ஊற வைத்துக் கொள்ளவும்.
அரிசி மற்றும் உளுந்தை தனித்தனியாக தான் ஊற வைக்க வேண்டும்.
சுமார் 4 மணி நேரம் ஊற விடுங்கள். பின்னர் இவை இரண்டையும் நன்கு அரைத்து எடுத்து கொள்ளவும்.
இவற்றை நன்கு அரைத்த பின்னர் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
8 மணி நேரம் மாவு ஊறி நன்கு புளித்து பொங்கி வரும். இந்த நிலையில் மாவை ஆப்ப கடாயில் இட்டு சூப்பரான மற்றும் சுவையான அப்பத்தினை தயார் செய்யுங்கள்.