ஜூலை மாத ராசி பலன் 2022 - விபரீத ராஜ யோகத்தால் திக்குமுக்காடும் மிதுனம் ராசிக்காரர்கள்
ஆனி மாதமும் ஆடி மாதமும் இணைந்த மாதம் ஜூலை மாதம்.
சூரியன் முதல் 15 நாட்கள் மிதுன ராசியிலும் பிற்பாதி 15 நாட்கள் கடக ராசியிலும் பயணம் செய்வார்.
இந்த மாதம் கும்பம் தொடங்கி மிதுனம் வரை வரிசையாக ஐந்து கிரகங்கள் ஆட்சி பெற்று பயணம் செய்கின்றன.
நவகிரகங்களின் சஞ்சாரம், கூட்டணி, சேர்க்கை, கிரகங்களின் பார்வைகளைப் பொருத்து மிதுன ராசிக்கு என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்று பார்க்கலாம்.
மிதுனம்
இந்த மாதம் உங்களுக்கு நிறைய அற்புதங்கள் நிகழப்போகிறது.நீங்கள் நினைத்த காரியம் நிறைவேறும்.
பத்தாம் வீடான தொழில் ஸ்தானத்தில் குருபகவான் பயணம் செய்கிறார்.
பத்தில் குரு பதவியில் மாற்றத்தை ஏற்படுத்துவார். குருவின் பார்வையும் சாதகமான வீடுகளின் மீது விழுவதால் உங்களுக்கு நிறைய பண வரவு வரும். வேலை, தொழிலில் நிறைய முன்னேற்றம் உண்டாகும்.
சிலருக்கு புரமோசனும் சம்பள உயர்வும் கிடைக்கும். அலுவலகத்தில் உங்களின் பணிக்கு பாராட்டுகள் கிடைக்கும். உயரதிகாரிகளின் புகழ்ச்சியும் கிடைக்கும். மாணவர்களுக்கு இது சாதகமான மாதம். உயர்கல்வியில் வெற்றி கிடைக்கும்.
விபரீத ராஜயோகம்
12ஆம் வீடான விரைய ஸ்தானத்தில் விரைய ஸ்தான அதிபதி சுக்கிரன் ஆட்சி பெற்று அமர்வது சிறப்பு.
இது விபரீத ராஜயோக காலமாகும். மனதில் நிம்மதியும் ஏற்படும். திடீர் பண வரவுகள் வந்து திக்குமுக்காட வைக்கும்.
யோகங்கள் நிறைந்த காலகட்டமாகும். இந்த கால கட்டத்தில் வரும் நல்ல வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுங்கள்.
லாபமான மாதம்
லாப ஸ்தானமான 11வது வீட்டில் செவ்வாய் பகவான் ராகு உடன் இணைந்து பயணம் செய்கிறார். செய்யும் தொழிலில் லாபம் கிடைக்கும்.
பண முதலீடுகள் இரட்டிப்பாகும். பங்குச்சந்தை முதலீடுகளில் செய்யும் லாபம் இரட்டிப்பாகும்.
மூத்த சகோதரர்களின் ஆதரவு தேடி வரும்.
மூத்த சகோதரரின் வீட்டு விஷேசங்களை முன்னின்று நடத்துவீர்கள். உங்களின் பாக்கெட்டில் பணம் நிறையும் மாதமாக இது அமைந்துள்ளது.