நான் சொன்னதை தவிர எல்லாமே பண்ணிருக்க... யூத் பட விழாவில் கென் குறித்து தனுஷ் ஓபன் டாக்!
யூத் திரைப்பட விழாவில் கலந்துக்கொண்ட நடிகர் தனுஷ் இளம் வயதிலேயே இயக்குனராக அறிமுகமாகியிருக்கும் கென் கருணாஸ் குறித்து பேசிய விடயம் இணையத்தில் படுவைரலாகியுள்ளது.
கென் கருணாஸ் குறித்து தனுஷ்
நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான அசுரன் திரைப்படத்தில் சிதம்பரம் என்ற கதாப்பாத்திரத்தில் நடித்து பிரபலம் ஆனவர் தான் கென் கருணாஸ்.

நடிகர் கருணாஸ் மற்றும் சின்னத்திரை பிரபலம் கிரேஸ் ஆகியோரின் மகன் தான் இவர். தற்போது யூத் என்ற படத்தை இயக்கி இளம் வயதிலேயே இயக்குனராக அறிமுகம் ஆகி இருக்கிறார்.
இந்நிலையில், இன்று யூத் பட விழா நடந்த நிலையில் அதில் நடிகர் தனுஷும் கலந்துகொண்டார். தனுஷ் மேடையில் பேசுகையில், படிப்பை மட்டும் நம்மகிட்ட இருந்து எடுத்துக்கவே முடியாது என்று அசுரன் படத்தில் நான் சொன்னதற்கு அதை தவிர கென் எல்லாமே பண்ணிருக்க.

படத்தின் முதல் ஃபோஸ்டரிலே மூன்று பெண்கள் உடன் பைக்கில் உட்கார்ந்திருக்கிறான் என கென் குறித்து கலகலப்பாக பேசியுள்ளார்.
மேலும் பேசுகையில், நான் சினிமாவில் அறிமுகமாகும் போது எல்லாம் நம்முடைய சீனியர்ஸை பார்த்து கத்துக்கனும் என்று சொல்வார்கள்.

ஆனால் இன்றைய தலைமுறையினர் அப்படி எல்லாம் காத்திருப்பதில்லை அடுத்து ஏதையாவது செய்து மேலே வந்துவிடுகிறார்கள்.
நான் 16 வயதில் சினிமாவுக்கு வந்தும் ரொம்ப காலம் வேஸ்ட் பண்ணிட்டேனோ என்று தோன்றியது. கென் என்னுடைய பையன் தான். இந்த யூத் திரைப்படம் மாபெரும் வெற்றியடைய வேண்டும் என்று நான் வேண்டிக்கிறேன். என குறிப்பிட்டுள்ளார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |