கோடிகளில் புரளும் வாடகை காதலி!
நாம் எத்தனையோ வாடகைகளை கேள்வி பட்டிருக்போம், வீடு வாடகை , கார் வாடகை என பலவிதமான வாடகைகளைப் கேள்வி பட்டிருப்போம் ஆனால் காதலி வாடகைக்கு விடப்படுவதை கேள்விக் கூட பட்டிருக்க மாட்டோம். ஆனால் ஜப்பானில் காதலை விற்று கோடிக்கணக்கில் சம்பாதிக்கும் பெண் பற்றிய பதிவு தான் இது!
காதலியாக இருந்து சம்பளம் பெறும் பெண்
ஜப்பானைச் சேர்ந்த கிர்மி என்றப் பெண்ணொருவர் ஆண் ஒருவருக்கு காதலியாக இருந்து தினமும் அதிக பணம் சம்பாதித்து வருகிறார்.
இந்தப் பெண் வாடகைத் தோழியாகவும், வாடகை காதலியாகவும் முழு நேரமாக வேலைப் பார்க்கிறார். இவர் மெக்சிக்கோவில் தான் தற்போது வசித்து வருகிறார். இவருக்கு சமூக வலைத்தளங்களிலும் 2 லட்சத்துக்கும் அதிகமான ஃபாலோவர்ஸ்களும் இருக்கிறார்கள்.
அன்பான ஆண் ஒருவரை சந்தித்து, அவருடன் திரைப்படம் பார்த்து சாப்பிட்டு குடித்து டேட்டிங் செய்து பணம் வாங்குகிறார். இவர் ஒருவருடன் தங்குவதற்கு குறைந்தது 44 ஆயிரம் ரூபா வரை சம்பளம் வாங்குகிறார்.
இதில் 9.858 பவுண்ட் வரை சம்பாதிக்கிறார். அதன் படி ஒரு மாதத்திற்கு பார்த்தால் இந்திய மதிப்பில் 10 இலட்சம் ரூபாவும் ஒரு வருடத்தின் படி பார்த்தால் 1 கோடி ரூபாவுக்கும் அதிகமாக சம்பாதித்து வருகிறார்.
இந்தப் பெண் பொதுவாக சிங்கிளாக இருக்கும் ஆண்களிடம் மட்டும் தான் பழகி டேட்டிங் செய்வாராம்.