நீங்கள் முரட்டு சிங்கிளா? போனஸுடன் இன்னும் நிறைய சலுகைகளை வழங்கும் கம்பெனி! எங்கு தெரியுமா?
காதலர் தினத்தில் சிங்கிளாக இருக்கும் ஊழியர்களுக்கு போனஸ் கொடுத்து கொண்டாடியிருக்கும் கம்பெனி குறித்த தகவல் தற்போது வைரலாக வருகின்றது.
போனஸ் கொடுத்து கொண்டாட்டம்
காதலர் தினம் நேற்கு உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. இந்நிலையில், பிலிப்பைன்சில் ஜெனரல் லூனா நகர மேயர் மாட் ப்ளோரிடா காதலர்கள் இல்லாமல் தனியாக, காதலர் தினத்தை வெறுத்து, முரட்டு சிங்கிளாக இருக்கும் தங்களது ஊழியர்களுக்கு காதலர் தின பரிசாக போனஸ் கொடுத்துள்ளார்.
மேலும், கூடுதலாகப் பணி புரிந்ததற்காக சிங்கிளாக இருக்கும் ஊழியர்களுக்கு மேயர் தனது பாராட்டு தெரிவித்து போனஸ் வழங்கியுள்ளார்.
அது மட்டுமல்லாமல் ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக சிங்கிளாக இருக்கும் தொழிலாளர்களுக்கு இந்த தினசரி ஊதியத்தை மூன்று மடங்காகவும் மற்ற ஊழியர்களுக்கு இரண்டு மடங்காகவும் ஊதியம் உயர்த்தப்பட்டு இருக்கிறது.
மேலும் ஒரு நாள் விடுமுறை எடுத்துக் கொள்ளவும் வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில், மேயர் மாட் கூறியதாவது, காதலர் தினத்தன்று சிங்கள் எப்படி இருக்கிறார்கள் என்பதை நான் நன்கு அறிவேன்.
சிங்கிளாக இருப்பவர்களுக்கு காதலர் தினத்தில் எவ்வித பரிசும் கிடைக்காது அதனால் அவர்களுக்கு நான் இவ்வாறான பரிசுகளை வழங்கினேன்.
இதன் மூலம் நம் மீதும் அன்பு காட்ட நமக்கென்று ஒருவர் இருக்கிறார்கள் என அவர்கள் அறிய வேண்டும்" எனக் கூறியிருந்தார். இதனைக்கேட்ட சிங்கிள் எல்லாம் அந்த நாட்டில் பிறந்திருக்கலாமே என்று தனது ஏக்கத்தை தெரிவித்து வருகிறார்கள்.