அழிவடைந்து போகும் அதியச உயிரினம்... இது இப்படித்தான் இருக்குமா? சுவாரசிய தகவல்
நாம் நாளுக்கு நாள் அறிந்து கொள்ளும் ஒவ்வொன்றிலும் தன்னை புதிதாக புதுப்பித்து காண்பிக்கிறது இயற்கை இப்படியும் இருக்குமா ? என்று எண்ணத்தோன்றுகின்ற படைப்புலகின் ஆச்சரிய பட்டியலில் அமைதியாக மறைந்திருக்கும் ஒரு பாலூட்டி வகை உயிரினம் தான் தும்பிப்பன்றிகள் தாவர உண்ணிகளான இந்த வகை உயிரினங்கள் தமது தனித்துவமான நடத்தைகளாலும் பிறப்பு வழி தோற்றப்பாடுகளாலும் ஆச்சரியங்களின் அதிசய குறியீடுடாகவும் விளங்குகின்றன.
இவை தட்டையான உடல் அமைப்போடு நீளமாக காணப்படும் இதனுடைய மூக்குப்பகுதி தும்பிக்கை பொருத்தப்பட்டது போல நீளமாக காணப்படுவதால் தும்பிக்கைப் பன்றிகள் என்றும் அழைக்கப்படுகின்றன.
இவை தங்களின் முன் காணப்படும் எவற்றையும் விரைவாக பற்றிக்கொள்ளும் விசேட ஆற்றல் பொருந்தியவை என்பது இவற்றின் உருவ அமைப்பெலொரு ஆச்சரியமே.
இந்த வகை உயிரினங்கள் தெற்கு மற்றும் மத்திய அமெரிக்கப்பகுதிகளிலும் தென்கிழக்காசிய நாடுகளின் அடர்ந்த காடுகளையும் அதிகமாக தமது வாழிடங்களாக அமைத்துக்கொள்ளும் இவை மனிதர்களாக நாம் எப்படி வாழிடங்களின் பெயர்களால் இவரின்னார் இந்த ஊரார் என்று வரையறை செய்கின்றோமோ அது போல இவையும் தமது
வாழிடங்களின் அடிப்படையில் பிரேசில் தும்பிப்பன்றி , மலாய்த்தும்பிப்பன்றி , மெக்சிக்கோ தும்பிப்பன்றி , கபோமணி தும்பிப்பன்றி , மலைத்தும்பிப்பன்றி என ஐந்து வகையான இனங்களாக வேறு பிரிக்கப்பட்டு இனங்களாக்கப்படுகின்றன.
இதற்கேற்றாற்போல அவற்றின் உடல் அமைப்பில் நிறங்கள் மற்றும் உரோமங்களல் வித்தியாசங்படுகின்றன குதிரை , குரங்கு , வரிக்குதிரை , மூக்குக்கொம்பன் போன்ற இன்ங்களோடு சேர்ந்து உணவு தேடும் இவை அருகி வரும் விலங்கினங்களின் பட்டியலில் சேர்க்கப்படுகின்றமை மனிதர்களாகிய நம்மால் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற செய்தியை சொல்லி நிற்கின்றன.
இவற்றினுடைய விசேடமான உடலமைப்பு பார்ப்பவரை அதிசயிக்க வைக்கும்படியாக 6.6 அடி அதிகூடிய நீளமாகவும் 3 அடி வரை உயரமாக வளரக்கூடிய இவை சுமார் 150 முதல் 300 kg. வரை உடல் எடையைக்கொண்டும் காணப்படும் அதே வேளை இவை வெண்நிறம், கரு நிறம், வெளிர் நிறம், செம்மண் நிறம் சாம்பல் நிறங்களில் தமது இருப்பிடங்களுக்கேற்ப வேறுபட்டுக்காணப்படும் இவற்றிலே பெண் தும்பிப்பன்றிகளுக்கு அவரை ஜோடி முலைக்காம்புகள் மாத்திரமே காணப்படும் ஆண் தும்பிப்பன்றுகளின் உடல் நீளத்தை பொறுத்து
அவற்றின் ஆண்குறிகளின் நீளமும் அமைந்திருப்பது விசேடமானதொரு தன்மையாகும் அதே வேளை மலாய் தும்பிப்பன்றிகளின் முன்னங்கால்களில் நான்கு குளம்பிகளும் பின்னங்கால்களில் மூன்று குளம்பிகளும் அமைந்து காணப்படும் இவை 42 முதல் 44 வரையான பற்களை கொண்டு காணப்படும்.
ஆண் தும்பிப்பன்றிகளைப்பொறுத்தவரை பிறந்து முதல் ஐந்து ஆண்டுகளிலையே இனப்பெருக்கத்திற்கு தயாராகிவிடும் இருந்த போதிலும் அவற்றை விட பெண் தும்பிகள் மிக வேகமாக இச்சொயற்பாட்டிற்கு தம்மை தயார்படுத்திக்கொள்ளுமாம்.
இதனால் இவை இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை குட்டியீனும் இவ்வாறு பிறந்த குட்டிகள் பதின்மூன்று மாதங்கள் தாயின் அரவணைப்பில் வாழ்ந்து பின்னர் தனியாக உணவுதேடத்தொடங்கும் குறித்த விலங்கினங்கள் 25 முதல் 30 வரையான ஆண்டுகள் உயிர்வாழக்கூடிய உடற்தகுதியை பெற்றிருந்தாலும் தம் வாழ்க்கை காலத்தில் தமது
வினோதமான வாழ்க்கை கோலத்தினாலும் உயலியல் தோற்றப்பாடுகளாலும் வேறுபட்டு நிற்கின்ற இவற்றை தமிழ் இலக்கியங்கள் மதகப்பன்றிகள் என பெயர்குறித்து அழைப்பது அவை தமிழ் நிலங்களிலும் வாழ்ந்துள்ளன என்பதை குறியிட்டுக்காட்டி விடுகிறது தும்பிக்கைப்பன்றி அல்லது தும்பிப்பன்றி என அழைக்கப்படும் இவை உலகளாவிய ரீதியில்
அழிவின் விழிம்பில் உள்ள உயிரினங்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள துன்பியலின் செய்தியோடு தமது விசேடமான நடத்தைக்கோலங்களால் இன்றுவரை வியப்பின் விசித்திரமானதொரு குறியீடாகவே இருந்து வருகிறது.