இங்கு காதலிகள் வாடகைக்கு விடப்படும்: மிகப்பெரிய தொழிலாக மாறும் “வாடகை காதலி”
நாம் எத்தனையோ வாடகைகளை கேள்வி பட்டிருக்போம், வீடு வாடகை , கார் வாடகை என பலவிதமான வாடகைகளைப் கேள்வி பட்டிருப்போம் ஆனால் காதலி வாடகைக்கு விடப்படுவதை கேள்விக் கூட பட்டிருக்க மாட்டோம்.
ஆம், சீனாவில் பெண் தோழிகளை வாடகைக்கு விடப்படுவதை மிகப்பெரிய வியாபாரமாக நடத்தி வருகிறார்கள்.
வாடகைக்கு விடப்படும் பெண்கள்
சீனாவில் காதலி அல்லது பெண் தோழிகள் இல்லை என கவலைப்படும் ஆண்களுக்காக பெண்களை வாடகைக்கு கொடுத்து வருகின்றனர்.
இதில் காதலிகள் மற்றும் மனைவிகள் வாடகைக்கு விடப்படும் என ஒரு இணையத்தளத்தை நடத்தி அதில் மிகப்பெரிய அளவில் பணம் சம்பாதித்து வருகின்றனர். இந்த வாடகையில் இலட்சங்களில் அல்ல கோடிகளில் தான் வசூலாகி வருகிறதாம்.
இதனை பெண்கள் பகுதி நேர வேலையாக நினைத்து பணம் சம்பாதித்து வருகின்றனர். இது உணர்ச்சிகரமான வேலை பணம் மட்டும் தான் முக்கியமாக பார்க்கப்படுகிறது.
சீனாவில் திருமணம் குறித்து தற்போது கொஞ்சம் வித்தியாசமாக சிந்தித்து வருகின்றனர். சில பெண்கள் வீட்டில் திருமணம் செய்துக் கொள்ள வற்புறுத்துவதால் போலியாக ஒரு காதலனை காட்டி தாங்கள் காதலிப்பாத சில காலங்களுக்கு நாடகம் போடுவார்கள் இதையும் அவர் ஒரு வியாபாரமாகத் தான் பார்க்கிறார்கள்.
இந்த தொழிலில் ஈடுபடும் பெண் ஒருவர் தனது வாடகை கட்டணமாக 1000 யுவான் அதாவது இந்திய மதிப்பில் ரூ. 12 ஆயிரம் ஆகும். அதுவே அந்தப் பெண்ணிடம் பேச வேண்டுமானால் கூடுதலாக 6000 ரூபாயும், லாங் டிரைவ்களுக்கு 4000 ரூபாய்க்கும் வசூலிக்கப்படுகிறது.
இந்த வியாபாரம் கொஞ்சம் வித்தியாசமாகத் தான் இருக்கிறது எனப் பலரும் தங்களது எதிர்மறைக் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.