95 வயதில் சாதனை! உயிரை பணையம் வைத்து மூதாட்டி செய்த காரியம்
உலக மாஸ்டர் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் சுமார் 95 வயதான முதாட்டியொருவர் மூன்று தங்க பதக்கம் வென்ற தகவல் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
போலந்து நாட்டில் சாம்பியன்ஷிப்
போலந்து நாட்டில் உள்ள டோரூனில் என்ற இடத்தில் “உலக மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப்” போட்டிகள் இடம்பெற்று வருகிறது.
இந்த போட்டியில் பல நாடுகளை சேர்ந்த வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளார்கள்.
அந்த வகையில் இந்தியா சார்பில் சுமார் 95 வயதான பவானி தேவி தாகர் எனும் மூதாட்டியொருவர் கலந்து கொண்டார்.
இதனை தொடர்ந்து அங்கு நடந்த 60 மீட்டர் ஓட்டப்பந்தயம், குண்டு எறிதல், வட்டு எரிதல் ஆகிய போட்டிகளில் இந்திய சார்பில் கலந்து கொண்டு வெற்றியும் பெற்றுள்ளார்.
3 தங்க பதக்கங்களை அள்ளிய பாட்டி
இந்த நிலையில் குறித்த பாட்டிக்கு 3 தங்க பதக்கங்கள் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த தகவல் சமூக வலைத்தளங்களில் புகைப்படத்துடன் வைரலாகி வரும் நிலையில், இதனை பார்த்த இணையவாசிகள், “ சாதிப்பதற்கு வயது தேவையில்லை” என கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.