டோக்கியோ பாராலிம்பிக்ஸ்... இந்தியாவுக்கு இரண்டாவது வென்ற சுமித் அண்டில்! உலக சாதனை
மாற்றுத்திறனாளிகள் தங்கள் திறமையை வெளிப்படுத்த உதவும் பாராலிம்பிக் போட்டி 2020 டோக்கியோவில் இன்று தொடங்கி செப். 5-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
இதில் மொத்தம் 4,500 வீரா், வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனா். உலகின் மிகப்பெரிய விளையாட்டுத் திருவிழாவான ஒலிம்பிக் போட்டிகள் முடிந்தவுடன் பாராலிம்பிக் போட்டி நடத்தப்படும்.
இதனையடுத்து, இந்தியாவில் இருந்து 54 போ் கொண்ட அணி 9 விளையாட்டுகளில் பங்கேற்கிறது. தற்போது இந்தியாவுக்குப் பதக்க மழைதான். 2 தங்கம், 2 வெள்ளி, ஒரு வெண்கலம் என ஒரே நாளில் ஐந்து பதக்கங்களை வென்றுள்ளது.
மேலும், ஈட்டி எறிதலில் இந்தியாவின் சுமித் அண்டில் உலக சாதனையுடன் தங்கம் வென்று அசத்தியுள்ளார். ஈட்டி எறிதல் எஃப் 64 பிரிவில் கலந்துகொண்ட இந்தியாவின் சுமித் அண்டில் முதல்முறை 66.95 மீ. தூரம் வீசினார்.
இது ஓர் உலக சாதனையாகும். 2-வது முறை அதை விடவும் அதிகத் தூரம் வீசி மற்றொரு உலக சாதனையை நிகழ்த்தினார். 68.08 மீ. ஒரே போட்டியில் மூன்று முறை உலக சாதனை படைத்து அனைவர் கவனத்தையும் சுமித் அண்டில் ஈர்த்துள்ளார்.
5-வது முயற்சியில் 68.55 மீ. தூரம் எறிந்து மூன்றாவது முறையாக உலக சாதனை படைத்தார். இந்தப் போட்டிக்கு முன்பு அதிகபட்சமாக 62.88 மீ. தூரம் மட்டுமே அவர் வீசியிருந்தார். இதனால் அவருடைய இன்றைய ஆட்டத்திறன் அனைவராலும் வெகுவாக ஆச்சர்யத்துடன் பார்க்கப்பட்டது.
#SumitAntil is the Champion, World Record Holder, #Tokyo2020 #Paralympics ? #Gold Medallist #Javelin @ParaAthletics
— Paralympic India ?? #Cheer4India ? #Praise4Para (@ParalympicIndia) August 30, 2021
Cheer4India #Praise4Para @narendramodi @ianuragthakur @IndiaSports @Media_SAI @ddsportschannel @TheLICForever @VedantaLimited @neerajkjha @EurosportIN pic.twitter.com/jWoM36Bj0l