துப்பாக்கி சுடுதல் போட்டியில் முன்னேறிய அஜித்: கொண்டாட்டத்தில் ரசிகர்கள்
40வது தமிழ்நாடு மாநில துப்பாக்கிச் சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில் நடிகர் அஜித் அடுத்த ரவுண்டுக்கு தகுதியாகியுள்ளதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். நடிப்பை தாண்டி சைக்கிளிங் ஓட்டுவது, பைக் சாகச பயிற்சி, துப்பாக்கி சுடுதல் என பல விஷயங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.
சினிமாவையும் தாண்டி அஜித்தின் பலவித திறமைகளை கண்டு வியக்காத ரசிகர்களே இல்லை, அந்தளவுக்கு நாளுக்கு நாள் தன்னை மெருகேற்றி வருகிறார். இந்நிலையில் தற்போது அஜித் ரைஃபிள் கிளப்பில் துப்பாக்கிச் சுடுதலில் கவனம் செலுத்தி வருகிறார். அதாவது, 40 வது தமிழ்நாடு மாநில துப்பாக்கிச் சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில் அஜித் அடுத்த ரவுண்டுக்கு தேர்வாகியுள்ளாராம்.
இத்தகவல் வெளியாகி அஜித் ரசிகர்கள் அதை வைரலாக்கி வருகின்றனர்.