திருமணத்திற்கு முன்னரே கர்ப்பத்தை அறிவித்த பிரபல நடிகை! அப்பா குறித்து குழப்பத்தில் ரசிகர்கள்
நடிகை இலியானா தற்போது திருமணம் செய்யாமல் கர்ப்பமாக இருப்பதாகவும், அவரின் குழந்தைக்காக காத்திருப்பதாகவும் ஒரு புகைப்படம் தற்போது அதிகம் வைரலாகி வருகின்றது.
இலியானா
தமிழ்,தெலுங்கு, இந்தி என பல்வேறு மொழி படங்களில் பிஸியாக நடித்து வருபவர் தான் நடிகை இலியானா. இவர் 2006ஆம் ஆண்டு கேடி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகியிருந்தார்.
அதனைத் தொடர்ந்து சங்கர் இயக்கத்தில் வெளியான விஜய்க்கு ஜோடியாக நண்பன் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானார். அதற்குப் பிறகு அவர் வேறு எந்த தமிழ்த்திரைப்படத்தில் நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
குழந்தைக்காக காத்திருக்கும் இலியானா
இந்நிலையில் நடிகை இலியானா தான் கர்ப்பமாக இருப்பதாக திடீரென அறிவித்திருக்கிறார். இதனைக் கேட்ட அனைவரும் அதிர்ச்சியடைந்திருக்கின்றனர்.
இலியானா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 2 புகைப்படங்களை பதிவிட்டிருக்கிறார். அதில் ஒன்றில் குட்டிக் குழந்தையின் டீசர்ட்டில் சாதனைப் பயணம் ஆரம்பமாகிவிட்டது என கேப்ஷன் கொடுக்கப்பட்டு இருந்தது.
மற்றொரு புகைப்படத்தில் மம்மா என்கிற செயினை கழுத்தி அணிந்தபடி இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டிருக்கிறார். மேலும், அதில் விரைவில் வரவுள்ள என்னுடைய குட்டி டார்லிங்கை எதிர்பார்த்து காத்திருக்கிறேன் என தலைப்பிட்டு பதிவிட்டிருக்கிறார்.
இதனைப் பார்த்த அனைவரும் ஒரு புறம் வாழ்த்து சொல்லி வந்தாலும் கணவர் யார் எனக் கேள்வி கேட்டு வருகின்றனர்.