மகளிர் தினத்தில் வாழ்த்து சொன்ன வைரமுத்து: அதே கவிதையை திருப்பிப்போட்டு விளாசிய சின்மய்!
மகளிர் தினமான நேற்று வைரமுத்து மகளிர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கும் முகமாக கவிதை ஒன்றை தெரிவித்த வைரமுத்துவை கவிதை பாணியில் திட்டியிருக்கிறார் சின்மய்.
கவிஞர் வைரமுத்து
தமிழில் 100இற்கும் அதிகமான படங்களுக்கு பாடல் வரிகள் எழுதி கொடுத்தவர் தான் வைரமுத்து. கவிதைகள், நாவல்கள் போன்றவையும் அவர் தொடர்ந்து எழுதி வருகிறார்.
தமிழில் எண்ணற்ற பாடல்களை வைரமுத்து எழுதியிருக்கிறார் ஆனால் அவருக்கே கடினம் கொடுத்த சில பாடல்களும் தமிழ் சினிமாவில் அதிகம் இருக்கத்தான் செய்கிறது.
இவ்வாறு இருக்கையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி புகார் அளித்திருந்தார். இது தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதனால் சின்மயிக்கு எதிராகவும், ஆதரவாகவும் பல்வேறு கருத்துகள் எழுந்த நிலையில், வைரமுத்து தான் ஒப்பந்தம் செய்யப்பட்ட எந்தப் படத்திற்கும் அவரை விமர்சித்து ஏன் அவருக்கு வாய்ப்பு தருகிறீர்கள் என்று டுவிட் செய்து வருகிறார்.
வாழ்த்து சொன்னதை வறுத்தெடுக்கும் சின்மய்
இந்நிலையில் நேற்றைய தினம் உலகளாவிய ரீதியில் மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. இந்த தினத்தை சிறப்பிக்கும் வகையிலும், மகளிர்களுக்கு வாழ்த்து சொல்லும் வகையிலும் கவிஞர் வைரமுத்து கவிதை ஒன்றின் மூலம் வாழ்த்து தெரிவித்திருந்தார்.
அந்தக் கவிதையை அப்படி கொஞ்சம் மாற்றி வைரமுத்துவிற்கு பதிலடி கொடுத்திருக்கிறார்கள் சின்மய்.
அந்தக் கவிதையில்
“மாலையும் நகையும்
கேட்கவில்லை பெண்;
மதித்தல் கேட்கிறாள்
வீடும் வாசலும்
விரும்பவில்லை பெண்
கல்வி கேட்கிறாள்
ஆடம்பரம் அங்கீகாரம்
ஆசைப்படவில்லை பெண்;
நம்பிக்கை கேட்கிறாள்
கொடுத்துப் பாருங்கள்;
அவளே பாதுகாப்பாள்
ஆண்களையும் உலக மகளிர் திருநாள் வாழ்த்து” என வாழ்த்துத் தெரிவித்திருந்தார்.
அந்தக் கவிதைக்கு,
அவ்வீட்டு வாசலை தாண்டும்பொழுது
காம வெறியர்களை கேட்க்கவில்லை பெண்;
பாதுகாப்பு கேட்க்கிறாள்.
பாலியல் குற்றவாளிகளை
அடையாளம் காட்டும்பொழுது
அவதூரு கேட்க்கவில்லை பெண்;
நியாயம் கேட்கிறாள்
என சின்மய் அவரது பாணியில் கவிதையாக சொல்லி இவர் எப்படி பெண்களின் பாதுகாப்பு குறித்து பேசுகிறார் என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என கவிதை நடையிலேயே அவருக்கு ட்விட்டரில் பதில் கொடுத்திருக்கிறார்.