மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விஜய் பட நடிகை: இது தான் காரணமா?
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள விஜய் பட நடிகையின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் அதிகமாக பேசப்பட்டு வருகிறது.
இலியானா
தமிழ்,தெலுங்கு, இந்தி என பல்வேறு மொழி படங்களில் பிஸியாக நடித்து வருபவர் தான் நடிகை இலியானா.
இவர் 2006ஆம் ஆண்டு கேடி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகியிருந்தார். அதனைத் தொடர்ந்து சங்கர் இயக்கத்தில் வெளியான விஜய்க்கு ஜோடியாக நண்பன் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானார்.
அதற்குப் பிறகு அவர் வேறு எந்த தமிழ்த்திரைப்படத்தில் நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மருத்துவமனையில் அனுமதி
சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இலியானா. தற்போது மருத்துவமனையில் திடீர் என்று அனுமதிக்கப்பட்டதாகக் கூறி இன்ஸ்டா ஸ்டோரீஸில் புகைப்படம் வெளியிட்டிருக்கிறார்.
அவருக்கு மூன்று பாட்டில் ட்ரிப்ஸ் ஏற்றியிருக்கிறார்கள். எதனால் இந்த சிகிச்சை என்பதை இலியானா தெரிவிக்கவில்லை. ஆனால் தான் தற்போது நலமாக இருப்பதாக மட்டும் கூறியுள்ளார்.
இவரின் உடல் நிலை குறித்து அறிந்துக்கொண்ட பல திரையுலகிரும், அவரது ரசிகர்களும் அவரை நலம் விசாரித்து வருகின்றார்கள். அதற்கு அவர் உங்கள் அன்புக்கு மிகவும் நன்றி என தெரிவித்திருக்கிறார்.