பார்வதியின் கேள்வியால் பதில் சொல்ல முடியாமல் திணறிய பிரபலம்! டைட்டில் வின்னர் யார் தெரியுமா?
பிக் பாஸ் வீட்டிலிருக்கும் மைனா நந்தனியை அவமதிக்கும் வகையில் தொகுப்பாளினி பார்வதி சில கேள்விகளை கேட்டுள்ளார்.
பிக் பாஸ் சீசன்6
பிக் பாஸ் சீசன் 6 தற்போது தமிழில் மிகவும் விறுவிறுப்பாக சென்றுக் கொண்டிருக்கிறது.
இந்த நிகழ்ச்சி தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் மிகவும் வெகு விமர்சையாக செல்லும்.
இந்த நிலையில் தெலுங்கு பிக் பாஸ் நிறைவடைந்துள்ளது தமிழ் பிக் பாஸ் இறுதிகாலக்கட்டத்தில் சென்றுக் கொண்டிருக்கிறது.
இந்த போட்டியில் சுமார் 21 பிரபலங்கள் களமிறங்கியிருந்தார்கள். தற்போது பிக் பாஸ் ஓட்டிங்கின் பிரகாரம் 14 போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டுள்ளார்கள்.
கடந்த வாரம் வெளியேறிய பிரபலம்
இதேவேளையில், சமீபத்தில் ரச்சிதா மகாலட்சுமி பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி இருந்தார்.
ஆனால் பிக் பாஸ் போட்டியாளர்கள் மற்றும் ரசிகர்கள் என அணைவரும் அமுதவாணன் மற்றும் மைனா இருவரில் ஒருவர் தான் வெளியேறுவார் என எதிர்பார்த்தனர்.
இதனை தொடர்ந்து பிக் பாஸ் ஓட்டிங்கில் ரக்ஷிதா தான் குறைவான வாக்குகள் பெற்றுள்ளார் என அதிரடியாக வெளியேற்றப்பட்டார்.
பார்வதியின் கடுமையான கேள்விகள்
இந்நிலையில் இந்த வாரத்திற்கு பிக் பாஸ் வீட்டிற்கு சிறப்பு விருந்தினராக பார்வதி சென்றுள்ளார்.
போட்டியாளர்களில் மைனாவை அழைத்து கடுமையான வார்த்தைகளால் சில கேள்விகளை மைனாவிடம் கேட்டுள்ளார்.
இவர் கேட்ட கேள்விக்கு மைனா பதில் கூற முடியாமல் பார்வதியை கலாய்க்கும் வகையில் பதிலளித்துள்ளார்.
இதனை பார்க்கும் போது போட்டியாளர்களில் மைனாவும் ஒரு வெற்றியாளராக வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அந்தவகையில் இன்றைய நாளுக்கான இரண்டாவது ப்ரோமோ வெளிவந்துள்ளது.