கர்ப்பமாக இருப்பதாக கணவரின் குடும்பதினரிடம் தெரிவித்த மனைவி! இறுதியில் நேர்ந்த சோகம்
சென்னையில் மாதவரம் மூலக்கடை பெரியார் நகர் பகுதியை சேர்ந்தவர் ரஞ்சித் குமார். இவருக்கும் கனிமொழி என்ற பெண்ணிற்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது.
இதையடுத்து, இதுவரை இவர்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லை. இதனால் கனிமொழியின் மாமியார் கனிமொழியை திட்டியும், அவரிடம் சண்டை போட்டும் வந்துள்ளார்.
ஒருகட்டத்தில் மாமியாருக்கு பயந்து, தான் கர்ப்பமாக இருப்பதாக குடும்பத்தாரிடம் பொய் கூறியுள்ளார் கனிமொழி. ஆனால், சந்தேகமடைந்த கனிமொழியின் கணவர், கனிமொழியை பரிசோதனைக்காக அழைத்துசென்றுள்ளார்.
அங்கு சென்றதில், கனிமொழி கர்ப்பமாக இல்லை என்ற உண்மை தெரியவந்துள்ளது. இதனால் பயந்துபோன கனிமொழி, தனது கணவரின் குடும்பத்தினருக்கு உண்மை தெரிந்துவிட்டதால் என்ன சொல்ல போகிறார்களோ? என்ற பயத்தில் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.
இச்சம்பம் குறித்து மாதவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.