விக்னேஷ் சிவனின் கையிலுள்ள வாட்ச்சில் இவ்வளவு விஷயங்கள் இருக்கா? இதன் பெறுமதி எவ்வளவு தெரியுமா?
நயன்தாராவின் கணவர் விக்னேஷ்சிவன் கையில் இருக்கும் கடிகாரத்தின் பெறுமதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சினிமா பயணம்
தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் தான் நடிகை நயன்தாரா.
இவருக்கு இணையாக இன்று வரை தமிழ் சினிமாவில் யாரும் இல்லை என சினிமா வட்டாரங்கள் முனுமுனுத்து வருகிறார்கள்.
இவர் தமிழ் சினிமாவில் இருக்கும் அனைத்து முன்னணி நடிகர்களுடன் நடித்த இவர் சுமார் 20 வருடங்களுக்கு மேலாக சினிமாவில் நடித்து வருகிறார்.
இதனை தொடர்ந்து,“ நானும் ரௌவுடி தான்” திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள்.
இந்த நிலையில் தற்போது இவர்களுக்கு அழகிய இரண்டு ஆண் குழந்தைகள் இருக்கிறார்கள்.
கைகடிக்காரம் எவ்வளவு தெரியுமா?
இப்படியொரு நிலையில் இயக்குநர் விக்னேஷ்சிவன் அவர் சமிபத்தில் பகிர்ந்து புகைப்படங்களில் அவர் கையில் ரோலக்ஸ் கைகடிக்காரம் அணிந்துள்ளார்.
இந்த கடிக்காரம் சாதாரணமாகவே சுமார் 4 இலட்சம் விலைக் கொண்டதாக தான் இருக்கும்.
அதுவும் விக்னேஷ்சிவன் அணிந்திருக்கும் இந்த கடிக்காரம் 24 கரட் தங்கத்தில் செய்யப்பட்டுள்ளது என்பதால் அதன் பெறுமதி 17 - 18 இலட்சம் வரை செல்லும் என தகவல் வெளியாகியுள்ளது.
இந்த தகவல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. இதனை பார்த்த நெட்டிசன்கள்,“ இந்த கடிகாரம் இவ்வளவு பெறுமதியா?” என அதிர்ச்சியடையும் வகையில் கருத்துக்களை பகிர்ந்துள்ளார்கள்.