24 கேரட் தங்கத்தால் ஜொலித்த பிரபாஸ் பட நாயகி.. விலை கேட்டா வாயடைச்சு போயிடுவீங்க
திரைப்படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழாவிற்கு கீர்த்தி சனோன் தங்கத்தால் செய்யப்பட்ட சேலை அணிந்து வந்துள்ள காட்சி சமூக வலைத்தளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகின்றது.
பிரமாண்டமாக உருவாகும் திரைப்படம்
பிரபல இயக்குநர் “ஓம் ராவத்” இயக்கத்தில் நடிகர் பிரபாஸ், கீர்த்தி சனோன் ஆகியோரின் நடிப்பில் மிகவும் பிரமாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் தான் “ஆதிபுருஷ்”.
இந்த திரைப்படம் பொன்னியின் செல்வன் போல் இராமாயணத்தை மையமாக கொண்டு எடுக்கப்பட்டு வருகின்றது.
இதனை தொடர்ந்து இந்த படத்தில் பிரபாஸ் ராமனாகவும், கீர்த்தி சனோன் சீதையாகவும், இராவணன் கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகர் சையிப் அலிகான் நடித்து வருகிறார்.
மிகவும் பிரமாண்ட திரைப்படமாக எடுக்கப்படும் இந்த படத்திற்கு சுமார் 600 கோடி ரூபாய் பட்ஜெட் ஒதுக்கப்பட்டுள்ளது.
தங்க சேலையில் ஜொலிக்கும் பிரபலம்
இந்த நிலையில், இந்த திரைப்படத்திற்கான திரைப்படத்தின் ட்ரைலர் வெளியிட்டு விழா சமீபத்தில் இடம்பெற்றது. இந்த விழாவில் படக்குழுவினர் உட்பட பல பிரபலங்கள் கலந்து கொண்டார்கள்.
அதில், படத்தின் கதாநாயகி, கீர்த்தி சனோன் கலந்து கொண்டுள்ளார். அந்த நிகழ்விற்காக இவர் அணிந்து வந்துள்ள சேலை 24 கரட் தங்கத்தினால் வடிவமைக்கபட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பில் ஒரு அதிகாரபூர்வமான தகவல் இல்லையென்றாலும் சேலையின் விலை சுமார் “10 லட்சம் ரூபாய்” இருக்கும் என கணித்துள்ளனர்.
இந்த தகவல் சமூக வலைத்தளங்களில் அதிகமாக வைரலாகி வருகின்றது.
இதனை பார்த்த ரசிகர்கள், “ தங்க சேலையின் விலை இவ்வளவா? ” என கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள்.