வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே நகரும் கடிகாரம்: உலக அழிவை வெளிப்படுத்தும் டூம்ஸ்டே கடிகாரம்!
உலக அழிவில் இருந்து நாம் எவ்வளவு தூரம் இருக்கிறோம் என்பதைக்காட்டும் கடிகாரம் ஒன்று தற்போது பரவலாக பேசப்படுகிறது.
அழிவை காட்டும் கடிகாரம்
பொதுவாக உலகம் அழியப்போகிறது என பல புரளி தகவல்கள் வருடாவருடம் வந்த வண்ணமே உள்ளது. அந்தவகையில், இந்த பூமி அழிவுக்கு எத்தனை அருகில் இருக்கிறது என்பதை உணர்த்தும் ஒரு குறியீட்டுக் கடிகாரம்தான் டூம்ஸ் டே கடிகாரம்.
எப்போது இந்த கடிகாரத்தில் மணி 12 ஆகிறதோ, அப்போது உலகம் அழிவதாகப் பொருள்.
இந்த கடிகாரம் கிட்டத்தட்ட ஏழு தசாப்த காலங்களுக்கு முன் 1947ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.
இந்தக் கடிகாரத்தை உருவாக்கிய குழுவில், உலகில் ஆகச்சிறந்த அறிவியல் அறிஞர்களில் ஒருவரான ஆல்பர்ட் ஐன்ஸ்டினும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில், ஏற்படும் உலக நிகழ்வுகள், அரசியல் மாற்றங்கள், அச்சுறுத்தல்களை அடிப்படையாகக் கொண்டு பல விஞ்ஞானிகள் பல்வேறு மதிப்பீடுகளைச் செய்து, இந்தக் கடிகாரத்தை அவ்வப்போது மாற்றியமைப்பர்.
இந்தப் பணியை அமெரிக்க நாட்டில், சிகாகோ மாகாணத்தைச் சேர்ந்த லாப நோக்கற்ற புல்லட் இன் ஆஃப் தி அடாமிக் சையின்டிஸ்ட்ஸ் (The Bulletin of the Atomic Scientists ) என்கிற அமைப்பு மேற்கொள்கிறது.
கடிகாரத்தின் தற்போதைய நேரம்
டும்ஸ் டே கடிகாரம் உருவாக்கப்பட்டதிலிருந்து இப்போதுதான் 12 மணிக்கு மிக நெருக்கமாக இருக்கிறது. அதாவது உலகம் அழிவுக்கு மிக அருகில் இருக்கிறது என்று பொருள்படுகிறது.
கடந்த 2020 ஆம் ஆண்டு 12 மணி ஆக 100 வினாடிகள் இருப்பதாக கடிகாரம் மாற்றியமைக்கப்பட்டது.
உக்ரைன் மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளுக்கு இடையிலான போர் காரணமாக அணு ஆயுதங்கள் பயன்படுத்தப்படலாம் அது உலக அழிவுக்கு வழி வகுக்கலாம் என்கிற அச்சம் நிலவுவது இதற்கு முக்கிய காரணமாகக் கூறப்பட்டது.
மேலும், இக்கடிகாரம் கிட்டத்தட்ட 75 ஆண்டுகளுக்கு முன்பு 12 மணியாக ஏழு நிமிடங்கள் இருப்பதாக செயல்படத் தொடங்கியது.