இதய நோயாளிகள் இந்த உணவுகளை் தவிர்த்திடுங்க! சற்று விலகியே இருங்க
இன்றைய காலத்தில் பல நோய்களுக்கு நாம் உண்ணும் உணவுகளே பெரிதும் காரணமாக இருக்கின்றது.
கொழுப்புக்கள், கார்போஹைட்ரேட்டுகள் நிறைந்த உணவுகளை பலரும் விரும்பி உண்ணுகின்றார்கள். இது நாளாடைவில் பல பக்கவிளைவுகளை ஏற்படுத்தி விடுகின்றது.
குறிப்பாக இதய நோய்களை ஏற்படுத்துகின்றது. இதுபோன்ற இதயநோய் பிரச்சினை வராமல் தடுக்க ஒரு சில உணவுகளை தவிர்ப்பது அவசியமானது ஆகும்.
அந்த வகையில் தற்போது அந்த உணவுகள் என்ன என்பதை இங்கே பார்ப்போம்.
இதய நோயாளிகளுக்கு ஆபத்தான உணவுகள் எவை?
பிரெஞ்சு பிரைஸ் எளிதில் ஜீரணமாக கூடிய கார்போஹைட்ரேட்டுகள் நிரந்துள்ளன. இதனால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை உடனடியாக அதிகரிக்கச் செய்கிறது. மேலும் இதில் உள்ள அதிக உப்பு மற்றும் கொழுப்பு இதயத்திற்கு ஆபத்தானதாக அமைகிறது.
ஐஸ்கிரீமில் நிறைவுற்ற கொழுப்பு மற்றும் கலோரிகள் அதிகம் உள்ளன, இது எடை அதிகரிப்பதற்கும் மோசமான இதய ஆரோக்கியத்திற்கும் காரணமாக அமைகிறது.
பீட்சா சாப்பிட வேண்டும் என்றால் ஒரு துண்டு பீட்சாவை சாப்பிடுவதில் தவறில்லை, ஆனால் ஒட்டுமொத்தமாக சாப்பிட நினைப்பது ஆபத்தை உருவாக்கும்.
சிவப்பு இறைச்சி வேண்டாம்
கூல்டிரீங்ஸ் உங்கள் இன்சுலின் அளவை அதிகரிக்கலாம், எடை அதிகரிப்பை ஊக்குவிக்கலாம் மற்றும் உங்கள் வளர்சிதை மாற்ற ஆரோக்கியத்தை சீர்குலைக்கலாம். சோடாவிற்கு பதிலாக பழசாறுகள் அல்லது எலுமிச்சை ஜூஸ் போன்றவற்றை உட்கொள்வது நல்லது.
இதய பிரச்சினைகள் மற்றும் உடல் பருமன் உள்ளவர்கள் எப்போதும் பதப்படுத்தப்பட்ட இறைச்சி மற்றும் சிவப்பு இறைச்சியிலிருந்து விலகி இருப்பது நல்லது.
எண்ணெய்யில் டீப் பிரை செய்யப்பட்ட கோழி இறைச்சியை சாப்பிட்டால் உங்கள் கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்கும். எனவே, பொரித்த கோழிக்கறி சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.