புற்றுநோய் செல்களை அழிக்கும் தக்காளி சட்னி! அஸ்ஸாம் பாணியில் எப்படி செய்வது?
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரையில் அனைவரும் விரும்பும் காய்கறிகளின் பட்டியவில் தக்காளி நிச்சயம் முக்கிய இடம் பிடித்துவிடும். அறிவியலின் பிரகாரம் இது ஒரு பழவகையாகவே அறியப்படுகின்றது.
இது பார்ப்பதற்கு எவ்வளவுக்கு அழகாக இருக்கின்றதோ அதைவிட பல மடங்கு ஆரோக்கிய நன்மைகளையும், மருத்துவ குணங்களையும் கொண்டுள்ளமையே இதன் சிறப்பம்சம்.

தக்காளியில் வைட்டமின் ஏ, சி, கே, ஃபோலேட் மற்றும் பொட்டாசியம் ஆகிய ஊட்டச்சத்துக்கள் செரிந்து காணப்படுகின்றது.
இயற்கையாகவே தக்காளியில் சோடியம், சாச்சுரேட்டட் கொழுப்பு மற்றும் கலோரிகள் குறைந்த அளவில் காணப்படுவதால் உடல் எடையை குறைக்கும் முயற்சியில் இருப்பவர்களுக்கு தக்களி பெரிதும் துணைப்புரியும்.

உயிர்ச்சத்து பி1, நியாசின் உயிர்ச்சத்து, வைட்டமின் பி6, மக்னீசியம், பாஸ்பரஸ் மற்றும் தாமிரமும் தக்காளியில் உள்ளதால், பல்வேறு ஆரோக்கிய பிரச்சினைகளுக்கு தீர்வு கொடுப்பதுடள் இதில் காணப்படும் நார்ச்சத்து செரிமானத்தை சீராக்குவதுடன் மலச்சிக்கலுக்கும் தீர்வு கொடுக்கும்.
தக்காளியில் நீர்ச்சத்தும் அதிகமாக இருப்பதால்,தக்காளியை உணவில் சேர்த்துக்கொள்வதால்,எளிதில் வயிறு நிரம்பி உணர்வும் ஏற்படும். மேலும் இரத்தக் கொதிப்பு, அதிக கொழுப்பு, வாதம் மற்றும் இதய நோய்களில் இருந்தும் தக்காளி பாதுகாப்பு கொடுக்கும்.

மேலும் சரும ஆரோக்கியத்திலும் முக்கிய பங்கு வகிகின்றதுடன் ஒரு சில புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை கட்டுப்படுத்துவதிலும் ஆற்றல் காட்டுகின்றது.
இவ்வளவு மருத்துவ குணங்கள் மட்டும் ஆரோக்கிய நன்மைகள் நிறைந்த தக்காளியை கொண்டு அஸ்ஸாம் பாணியில் அசத்தல் சுவையில் தக்காளி சட்னி எப்படி செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
பழுத்த தக்காளி - 6 (பொடியாக நறுக்கியது)
மஞ்சள் தூள் - 1/4 தே.கரண்டி
மிளகாய் தூள் - 1தே.கரண்டி
சர்க்கரை - 1/2 தே.கரண்டி
உப்பு -தேவையான அளவு

தாளிக்க தேவையானவை
எண்ணெய் - 1 மேசைக்கரண்டி
கடுகு - 1/4 தே.கரண்டி
சீரகம் - கால் தே.கரண்டி
வெந்தயம் - ஒரு சிட்டிகை
பிரியாணி இலை - 1
வர மிளகாய் - 1

செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் எண்ணெயை ஊற்றி சூடானதும், கடுகு சேர்த்து தாளித்து, வர மிளகாய், சீரகம், வெந்தயம் மற்றும் பிரியாணி இலை ஆகியவற்றை சேர்த்து தாளித்துக்கொள்ள வேண்டும்.
அதனையடுத்து நறுக்கிய தக்காளியை சேர்த்து, பாதி வெந்ததும் மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு மற்றும் சர்க்கரை சேர்த்து நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.

பின்னர் அதனை மூடிவைத்து 5 முதல் 10 நிமிடங்கள் வரையில் வேகவைத்து இடையிடையே நன்றாக கிளறிவிட்டு, தக்காளி ஈரப்பதம் முழுவதும் வற்றி எண்ணெய் பிரிந்து வரும் வரையில் வதக்கிக்கெள்ள வேண்டும்.
கடைசியில் உப்பு சரிபார்த்து அடுப்பை அணைக்கவும். அவ்வளவுதான் அசத்தல் சுவையில், அஸ்ஸாம் பாணியில் தக்காளி சட்னி தயார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |