என்னை மன்னிச்சிடுங்க... பிக்பாஸிற்குள் நடந்தது இதுதான்! கானா வினோத் வெளியிட்ட முதல் காணொளி
பிக்பாஸ் வீட்டிலிருந்து பணப்பெட்டியை எடுத்துச் சென்ற கானா வினோத் தனது முதல் காணொளியினை வெளியிட்டுள்ளார்.
பிக்பாஸ்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகிவரும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது தற்போது இறுதி வாரத்தை நோக்கி சென்றுள்ளது. இந்த சீசனில் பரபரப்பாக பேசப்பட்ட விடயம் என்னவெனில் பாரு, கம்ருதின் ரெட் கார்டு விவகாரம் தான்.
பின்பு கானா வினோத் பணப்பெட்டியை எடுத்துச் சென்றது யாரும் எதிர்பாராத அதிர்ச்சியாக இருந்தது. ஏனெனில் இவர் தான் பிக்பாஸ் 9 டைட்டில் வின்னராக வருவார் என்று அனைவரும் எதிர்பார்த்தனர்.

இந்நிகழ்ச்சியில் 24 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில் தற்போது கடைசியாக விக்ரம், சக்தி, திவ்யா, அரோரா என நான்கு பேர் உள்ளனர்.
இவர்களில் டைட்டில் வின்னர் யார் என்ற எதிர்பார்ப்பு அதிகமாகவே இருந்து வருகின்றது. இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு 18 லட்சம் ரூபாய் பணப்பெட்டியுடன் வெளியேறியதற்கு காரணத்தை கூறியுள்ளார்.

கானா வினோத் கூறியது என்ன?
கானா வினோத் பணப்பெட்டியை எடுத்துச் செல்வதற்கு உள்ளே இருக்கும் அரோரா தான் காரணம் என்று விமர்சனங்கள் எழுந்த நிலையில், இதற்கு கடந்த சனிக்கிழமை கானாவினோத் பதில் கொடுத்தாலும் அரோராவை பலரும் சத்தம் போட்டு வருகின்றனர்.

கானா வினோத்தை அவரது நண்பர்கள் மிகப்பெரிய வரவேற்பு கொடுத்து, வான வேடிக்கை, ஆடல், பாடல் என ஏற்பாடு செய்து வரவேற்றனர். இந்நிலையில் கானா வினோத் தனது முதல் காணொளியினை இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |