ரத்த சர்க்கரை 200க்கு மேல இருக்க? உயிருக்கே ஆபத்து! உடனே குறைக்க உதவும் ஆயுர்வேத மூலிகைகள்
நீரிழிவு ஒரு உலக பொது நோயாக உள்ளது. உலக மக்கள் பலரும் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
சர்க்கரை அல்லது குளுக்கோஸ் அளவானது இரத்தத்தில் அதிகமாகும் போது நீரிழிவு ஏற்படுகிறது. அதிகப்பட்சம் நாம் உண்ணக்கூடிய உணவு பழக்கமே இதற்கு முக்கிய காரணமாக உள்ளது.
அதிகப்படியான சர்க்கரையை உட்கொள்ளும்போது அது ரத்தத்தில் குளுக்கோஸ் அளவை அதிகரிக்கிறது என பலர் நினைக்கின்றனர்.
உணவு உண்பது மட்டுமே நீரிழிவு நோய்க்கான ஒரே காரணமாக இருப்பதில்லை. மன அழுத்தம், உடல் எடை அதிகரிப்பு மற்றும் உட்கார்ந்தே இருக்க கூடிய வாழ்க்கை முறை ஆகியவையும் நீரிழிவு நோய்க்கான முக்கிய காரணமாக உள்ளது.
நீரிழிவு நோய் என்பது குணப்படுத்த முடியாதது என பலர் நினைக்கின்றனர். இது தவறான கூற்றாகும். நீரிழிவு உடலில் சர்க்கரை அளவு அதிகரிப்பதால் ஏற்படுகிறது.
ஆனால் உடலில் சர்க்கரை சரியான அளவில் இல்லாமல் குறைவாக இருந்தாலும் அது உடலில் பிரச்சனைகளை ஏற்படுத்தும். எனவே சர்க்கரை அளவை நிர்வகிப்பதன் மூலம் நீரிழிவை சரி செய்ய முடியும். அதற்கு உதவும் சில மூலிகைகளையும் அவற்றின் ஆரோக்கிய நன்மைகளையும் இப்போது பார்க்கலாம்.
நித்திய கல்யாணி
நித்திய கல்யாணி என்பது இந்தியாவில் காணப்படும் மிக முக்கியமான மருத்துவ தாவரமாகும். இந்த பசுமையான தாவரத்தின் இலைகள் இரண்டாம் வகை நீரிழிவிற்கு சிகிச்சையளிக்க உதவுகிறது.
மலேரியா, தொண்டை புண் போன்ற பிற சுகாதார பிரச்சனைகளுக்கு சிகிச்சையளிக்கவும் இது உதவுகிறது இரத்த சர்க்கரை அளவை நிர்வகிக்க நித்திய கல்யாணியின் இரண்டு இலைகளை எடுத்து அப்படியே சாப்பிடலாம்.
அல்லது ஒரு கப் தண்ணீரில் இந்த இலையை கொதிக்க வைத்து அதை தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடிப்பதன் மூலம் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த முடியும்.
சிறுகுறிஞ்சான்
சிறுகுறிஞ்சான் செடியில் ஃபிளவனோல்ஸ் மற்றும் ஆரோக்கிய நன்மை அளிக்க கூடிய பல கலவைகள் உள்ளன. நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு இரத்த சர்க்கரை அளவை நிர்வகிப்பதில் இது பயனுள்ள மூலிகையாக இருக்கிறது. சிறுகுறிஞ்சான் ஒரு ஆயுர்வேத மூலிகையாகும்.
இது ஒவ்வாமை, இருமல் மற்றும் மலச்சிக்கல் போன்ற பல்வேறு உடல் பிரச்சனைகளை சரி செய்ய உதவுகிறது.
உணவை உட்கொள்வதற்கு ஒரு மணி நேரம் முன்பாக ஒரு டீஸ்பூன் சிறுகுறிஞ்சான் இலை பவுடரை தண்ணீரில் கலந்து குடிக்கலாம்.
வேங்கை மரம்
வேங்கை மற்றொரு ஆயுர்வேத மூலிகையாகும். இதுவும் இரத்தத்தில் சர்க்கரை அளவை பராமரிக்க உதவுகிறது. மேலும் இந்த மூலிகை உடலில் கொழுப்பின் அளவை குறைக்க உதவும் ஆண்டி ஹைப்பர் லிப்டெமிக் பண்புகளை கொண்டுள்ளது.
மேலும் அடிக்கடி சிறுநீர் கழித்தல், அதிகப்படியான அளவில் உணவு உட்கொள்வது மற்றும் கை, கால்களில் எரிவது போன்ற உணர்வு ஆகியவற்றையும் வேங்கை இலை குறைக்கிறது.
வேங்கை இலை சந்தைகளில் எளிதாக கிடைக்கின்றன. ஒரு கப் தண்ணீரில் வேங்கை இலை தூளை சேர்த்து அதை அதிகாலையில் வெறும் வயிற்றில் குடிக்கலாம்.
அமிர்தவல்லி இலை
இந்த தாவரத்தின் இலையானது இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தவும் நீரிழிவு நோயை நிர்வகிக்கவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த மூலிகையானது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.
இதில் உள்ள ஆண்டிஆக்ஸிடண்ட்கள் உடலை சேதப்படுத்தும் ஃப்ரீ ரேடிக்கலை எதிர்த்து போராடுகின்றன.
ஒரு கப் தண்ணீரில் ஒரு ஸ்பூன் அமிர்தவல்லி இலை தூள் கலந்து இரவில் வைத்துவிட்டு காலையில் அதை குடிக்கவும்.