உயிருக்கு உலை வைக்கும் சிவப்பு இறைச்சி ! தினந்தோறும் சாப்பிட்டால் மரணம் கூட நிகழும் ஜாக்கிரதை
இன்றைய கால கட்டத்தில் சிவப்பு இறைச்சியின் பலரும் விரும்பி சாப்பிடுகின்றார்கள். இருப்பினும் இதை தினந்தோறும் எடுத்துக் கொள்ளும் மக்கள் பல உடல் உபாதைகளுக்கு ஆளாகின்றன என்கிறார்கள் ஊட்டச்சத்து நிபுணர்கள். அளவுக்கு அதிகமாக சிவப்பு இறைச்சியை உட்கொள்வது உங்களுக்கு பலவிதமான பிரச்சினைகளை உண்டாக்கும். தற்போது அவை என்னென்ன என்பதை பார்ப்போம்.
சிவப்பு இறைச்சி சாப்பிடும் போது புற்றுநோய் அபாயம், ஆக்ஸினேற்ற அழுத்தம், இரத்த ஓட்டம் போன்றவை பாதிப்படைகிறது. இந்த சிவப்பு இறைச்சியால் குடலில் உள்ள பாக்டீரியாக்களுக்கு எந்த சத்தும் கிடைக்காது. எனவே சிவப்பு இறைச்சியை தவிர்த்து நீங்கள் புரோபயாடிக் உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள். இது உங்களுக்கு நன்மை அளிக்கும்.
நீங்கள் தினந்தோறும் சிவப்பு இறைச்சி சாப்பிடுவது உங்களுக்கு இதய நோய் அபாயத்தை உண்டாக்கும். எனவே இதய நோய் அபாயத்தை போக்க சிவப்பு இறைச்சியை அதிகமாக சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது. சிவப்பு இறைச்சியை இது பெருங்குடல் புற்றுநோய் அபாயத்தை அதிகரிக்கிறது. எனவே சிவப்பு இறைச்சியை சாப்பிடுவதில் கவனமாக இருங்கள். சிவப்பு இறைச்சி நீரிழிவு அபாயத்தை அதிகரிக்கிறது. இந்த இறைச்சியில் ஹூமோகுளோபின் இரும்புச் சத்து அதிகளவில் காணப்படுகிறது.
எனவே தினந்தோறும் சிவப்பு இறைச்சியை சாப்பிடுவதை கைவிடுவது நல்லது. மாதவிடாய் நிற்கும் பெண்களுக்கு இரும்புச் சத்து குறைபாடு காணப்படுகிறது அவர்கள் தகுந்த அளவு சிவப்பு இறைச்சியை எடுத்துக் கொள்ளலாம். எனவே இரும்புச் சத்து குறைபாடு இருப்பவர்கள் போதுமான அளவு சிவப்பு இறைச்சியை எடுக்கலாம். சிவப்பு இறைச்சி சாப்பிட்டால் எடை இழக்க நேரிடும். இது பசியை கட்டுப்படுத்துகிறது. இரத்தத்தில் சர்க்கரை அளவை உறுதிப்படுத்துகிறது. பசியை தடுக்கிறது.
இது எடை இழப்புக்கு வழி வகுக்கும். சிவப்பு இறைச்சியை சாப்பிடுவது நீங்கள் வேலை செய்ய தேவையான ஆற்றலை பெற முடியும். சிவப்பு இறைச்சியை அதிகமாக சாப்பிடுவது உங்களுக்கு சிறுநீரக கற்களை உண்டாக்கும். சிறுநீரகங்களில் படியும் தாதுக்கள் மற்றும் உப்புக்கள் கடினமான சிறுநீரக கற்களை உண்டாக்குகிறது. எனவே சிறுநீரக கற்களை தடுக்க சிவப்பு இறைச்சியை தவிர்ப்பது அவசியம்.
சிவப்பு இறைச்சியை சாப்பிடுவது பக்கவாதத்தை உண்டாக்கும். சிவப்பு இறைச்சியில் உள்ள புரதத்தின் வகை முக்கியமாக பக்கவாதங்கள் ஏற்படுவதில் மிக முக்கியமான பங்கு வகிக்கிறது. எனவே தினந்தோறும் சிவப்பு இறைச்சி சாப்பிடுவதை தவிர்த்து மிதமான அளவு எடுத்துக் கொள்ளலாம்.