முடிப்பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு: இந்த விதையை வைத்து ஹேர் மாஸ்க்!
பொதுவாகவே பெண்களுக்கு அடர்த்தியான கூந்தல் என்பது மிகவும் விருப்பமானதொன்று தான்.
ஆனால் தற்போது மாசுக்கள் நிறைந்த சுற்றுச்சூழல், வாழ்க்கை முறை மற்றும் பழக்கவழக்கங்களினால் முடி உதிர்வும் நரையும் வந்து அழகையே சிதைத்து விடுகிறது.
நம் முன்னோர்கள் எல்லாம் அப்போது எந்த ஷாம்பும் பயன்படுத்தியது இல்லை, எந்த எண்ணெய்யும் பயன்படுத்தியது இயற்கை பொருட்களைக் கொண்டு இயற்கையாகவே அழகான முடியைக் கொண்டிருந்தார்கள்.
இந்த முடிப்பிரச்சினைகளுக்கு எவ்வித பக்கவிளைவுகளுமின்றி இயற்கை வழிகளிலேயே சரி செய்யலாம். அந்தவகையில் தற்போது உங்கள் முடி உதிர்வுக்கும் நீண்ட முடி வளர்ச்சிக்கும் நரை முடி இல்லாமல் போவதற்கும் சிறந்த தீர்வாக அமைகிறது ஆளிவிதை ஹேர்மோஸ்க்.
ஆளிவிதை ஹேர்மோஸ்க் செய்முறை
முதலில் 2 தேக்கரண்டி ஆளி விதைகளை நன்றாக உலர வைத்து பொடியாக்கிக் கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு கோப்பையில் 1 தேக்கரண்டி கடலை மா உடன் பொடியாக்கிக் கொண்ட ஆளி விதையை சேர்த்து நன்றாக கலக்கவும்.
பிறகு தேவையான அளவு தயிர் சேர்த்து பேஸ்ட் போல கரைத்து கொண்டால் முடி பிரச்சினைகளுக்கு முடிவு கட்டும் ஹேர் மாஸ்க் தயார்.
பாவனை முறை
நீங்கள் தயார் செய்துக் கொண்ட ஹேர் மாஸ்க்கினை உச்சந்தலையில் இருந்து கூந்தல் நுனி வரை நன்றாக தடவி மசாஜ் செய்துக் கொள்ள வேண்டும்.
4 மணி நேரமாவது இதனை உங்கள் தலையில் வைத்திருக்க வேண்டும். பிறகு மிதமான ஷாம்பு போட்டு தலையை சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும்.
இந்த ஹேர் மாஸ்க்கானது உங்கள் உச்சந்தலையில் சீரான இரத்த ஓட்டத்தை உறுதி செய்து தலைமுடியின் வேர்கால்கள் வரை வலுவாக்கி உறுதியான கூந்தலைக் கொடுக்கிறது.