வெள்ளை முடியை கொஞ்சம் கொஞ்சமாக கருமையாக்கும் ப்ளாக் டீ! ஆனா இப்படி தான் பயன்படுத்தனும்
இளநரையை போக்கும் இயற்கை மருத்துவ முறையில் ப்ளாக் டீ சிறந்த பலனை கொடுக்கிறது. விலையுயர்ந்த க்ரீம், ஹேர் டை வகைகள் காட்டிலும் பாதிப்பில்லாமல் பக்கவிளைவுகள் உண்டாக்காத ப்ளாக் டீ நிச்சயம் பலன் கொடுக்க கூடியவை. இதை எப்படி கூந்தலின் கருமை நிறத்துக்கு பயன்படுத்தலாம் என்று பார்க்கலாம்.
ப்ளாக் டீ 1 தேவை தண்ணீர் - 2 கப் ப்ளாக் டீ பேக் - 2 காஃபித்தூள் - 2 டீஸ்பூன் தண்ணீருடன் காஃபித்தூள் சேர்த்து கொதிக்க வைக்கவும். பிறகு அதில் ப்ளாக் டீ பேக் சேர்த்து விடவும். இதை இறக்கி ஆறவைத்து உச்சந்தலை முதல் ஸ்கால்ப் நுனி வரை நன்றாக தடவி விடவும். ஒரு மணி நேரம் கூந்தலை வைத்திருந்து கூந்தல் உலர்ந்ததும் கூந்தலை நன்றாக அலசி எடுக்கவும்.
வாரத்துக்கு இரண்டு முறை இதை செய்து வந்தால் நரைமுடிக்கு விரைவில் தீர்வு கிடைக்கும். இது கூந்தலை நெகிழ்ச்சியாக வைத்திருக்கவும் செய்யும். ஆண்களும் நரைமுடியை போக்க இதை பயன்படுத்தலாம். ப்ளாக் டீ 2 தேவை ப்ளாக் டீ தேயிலை - 3 டீஸ்பூன் கல் உப்பு - கால் டீஸ்பூன் இரண்டு கப் நீரில் தேயிலை சேர்த்து கொதிக்க வைத்து அதில் கால் டீஸ்பூன் உப்பு சேர்க்கவும்.
தேயிலை இலைகள் நன்றாக நீரில் அமிழும் வரை கொதிக்க வைத்து இறக்கி ஆறவிடவும். இதை வடிகட்டி ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றிகொள்ளவும். தலை குளியலுக்கு மூன்று மணி நேரம் முன்பிருந்தே இதை கூந்தலில் நரை இருந்த பகுதியில் தெளிக்கவும். தொடர்ந்து கூந்தலில் ஸ்ப்ரே செய்து உலர விடலாம். அல்லது அகலமான பேஷனில் இந்த நீரை ஊற்றி தலைமுடியை கவிழ்த்து பேஷனில் ஊறவிடலாம்.
உச்சந்தலையில் மட்டும் ஸ்பேரே செய்து மீதி இருக்கும் முடியை 10 நிமிடங்கள் இந்த நீரில் ஊறவிட்டு எடுத்து வெறும் நீரில் அலசி எடுக்கவும். வாரம் இரண்டு முறை இப்படி செய்ய வேண்டும். இது வெள்ளை முடியை போக்கிவிடும். ப்ளாக் டீ 3 தேவை ப்ளாக் டீ - 10 பேக் தண்ணீர் - 2 டம்ளர் தண்ணீரை கொதிக்க வைத்து அதில் ப்ளாக் டீ பேக் சேர்த்து கொதிக்க வைத்து இறக்கிவைக்கவும்.
எப்போதெல்லாம் தலைக்கு குளிக்கிறீர்களோ அப்போதெல்லாம் தலையை அலசியதும் கூந்தலை கவிழ்த்து அதன் மீது மயிர்க்கால்கள் வரை இறங்கும்படி ஊற்றி வைக்கவும். திரவம் குறைந்தது 20 நிமிடங்கள் வரை கூந்தலில் விட்டு பிறகு இலேசாக கூந்தலை அலசி எடுக்க வேண்டும்.
எப்போதெல்லாம் தலைக்கு குளிக்கிறீர்களோ அப்போதெல்லாம் இதை செய்ய வேண்டும். தொடர்ந்து செய்து வந்தால் முடியின் நரையை முழுமையாக போக்கலாம். ப்ளாக் டீ தலைமுடிக்கு இயற்கையாக நிறத்தை மீட்டெடுக்கும் தன்மை கொண்டவை. இதில் இருக்கும் கெரட்டின் முடிக்கு ஊக்கத்தை அளிக்கிறது.
இதனால் நரைமுடி பிரச்சனை கட்டுக்குள் வைக்கப்படுகிறது. இந்த கருப்பு தேயிலையில் டானின் நிறைந்துள்ளது.
மேலும், ப்ளாக் டீ பயன்படுத்திய இரண்டு முறையில் ரிசல்ட் தெரிந்துவிடாது. படிப்படியாகத்தான் முடியின் நிறம் மாறக்கூடும். ப்ளாக் டீ பயன்படுத்துவது எளிதானது ஆனால் இதற்கான ரிசல்ட் படிப்படியாகத்தான் கிடைக்கும்.