உங்கள் உடலில் இந்த சத்துக்கள் குறைந்தாலும் முடி கொட்டும்... அப்போ இனி சாப்பிட வேண்டியவை இதுதான்!
ஒருவரின் அழகை அதிகரித்து வெளிக்காட்டுவதில் முடி முக்கிய பங்கு வகிக்கிறது, ஆனால் தற்போது மாசுக்கள் நிறைந்த சுற்றுச்சூழல், வாழ்க்கை முறை மற்றும் பழக்கவழக்கங்களினால் முடிப்பிரச்சினை ஏற்படுகிறது.
இந்தப் பிரச்சினைகள் தான் நாளடைவில் முடி உதிர்வு, இள நரை பிரச்சினைகளை உருவாக்குகிறது. இப்படி பல முடி பிரச்சினைகள் இருப்பவர்களுக்கு உடலில் இந்த சந்துக் குறைப்பாட்டால் தான் இந்தப் பிரச்சினைகள் எல்லாம் வருகிறதாம்.
முடி கொட்டாமல் வளரவும் இந்தச் சத்துக்களை பெறவும் தினமும் நீங்கள் உண்ண வேண்டியவை பற்றி பதிவை நாம் இப்போது பார்க்கலாம்.
முடியை வளர வைக்கும் சத்துக்களும் உணவுகளும்
முடி வளர்ச்சியை அதிகப்படுத்துவதிலும் முடிப்பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதிலும் முட்டைக்கு மிகப் பெரிய பங்கு இருக்கிறது. அப்படி முட்டையில் இருக்கும் அமினோ ஆசிட்ஸ் மற்றும் ஜிங்க்கின் வளமான மூலமாக இருப்பதால் இது முடி வளர்ச்சிக்கும் அடர்த்திக்கும் அதிகம் உதவுகிறது.
எள்ளு விதைகளில் இருக்கும் ப்ரோட்டீன்ஸ், ஜிங்க் போன்ற ஊட்டச்சத்துக்கள் முடிப்பிரச்சினைகளுக்கு சிறந்த தீர்வைக் கொடுக்கிறது. மேலும், எள் எண்ணெய்யானது உச்சந்தலையில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது.
முடியைப் பேணி பாதுகாப்பதற்கு பருப்பு வகைகளுக்கும் அதிக பங்கு இருக்கிறது. பருப்பில் இருக்கும் புரதமானது முடியின் நிலைமையை மேம்படுத்துகிறது.
கடல் உணவுகள் முடி வளர்ச்சிக்கு அதிகம் உதவுகிறது. இதில் ஜிங்க் சத்து கணிசமான அளவாக இருக்கும் நெத்திலி, நண்டு, இறால், போன்ற கடல் உணவுகள் முடி வளர்ச்சியை அதிகரிக்கும்.
பூசணி விதையில் இருக்கும் இரும்பு மற்றும் வைட்டமின் ஈ போன்ற சத்துக்கள் கூந்தலுக்கு இயற்கையாகவே உதவுகிறது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |