இடிப்பிற்கு கீழ் முடி வளர்க்க ஆசையா? இதை மட்டும் பின்பற்றினாலே போதுமே
ஒருவரின் அழகை அதிகரித்து வெளிக்காட்டுவதில் முடி முக்கிய பங்கு வகிக்கிறது, ஆனால் தற்போது மாசுக்கள் நிறைந்த சுற்றுச்சூழல், வாழ்க்கை முறை மற்றும் பழக்கவழக்கங்களினால் முடிப்பிரச்சினை ஏற்படுகிறது.
இந்தப் பிரச்சினைகள் தான் நாளடைவில் முடி உதிர்வு, இள நரை பிரச்சினைகளை உருவாக்குகிறது. எவ்வித முடிப்பிரச்சினைகளும் இல்லாமல், முடியை ஆரோக்கியமாக பராமரிக்க இந்த டிப்ஸ் உங்களுக்கு உதவியாக இருக்கும்.
முடியை பராமரிக்கும் முறை
தலைமுடியை அழகாக பராமரிக்க நினைப்பவர்கள் முதலில் தினமும் தலைக்கு குளிக்க வேண்டும். அப்படி தினமும் குளிக்கும் போது ஷாம்பூ போட்டு குளிக்காதீர்கள் ஏனெனில் ஷாம்பூவில் இருக்கும் இரசாயனம் தலைமுடியை பாதிக்கும் அதனால் தினமும் குளிக்கும் வாரத்தில் இரண்டு அல்லது மூன்று முறை போட்டு குளித்தால் மட்டும் போதுமானது.
குளிக்கும் போது நீங்கள் தெரிவு செய்யும் ஷாம்பூ மிக முக்கியமானது. ஷாம்பூ மற்றும் நீங்கள் பயன்படுத்தும் சவக்காரம் போன்வற்றை தேர்ந்தெடுப்பதில் அதிக கவனம் தேவை. அப்படி நீங்கள் தெரிவு செய்யும் ஷாம்பூவை மாற்றினால் பொடுகு, முடி வெடிப்பு போன்ற பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். மாறாக இயற்கை பொருட்கள் அதிகம் நிறைந்த ஷாம்பூக்களை பயன்படுத்துங்கள்.
தலைமுடிக்கு ஷாம்பூ பயன்படுத்துவது போல கண்டிஷனரும் பயன்படுத்துவார்கள். அப்படி பயன்படுத்தும் போது ஷாம்பூவிற்கு ஏற்ற கண்டிஷனரை பயன்படுத்த வேண்டும். அப்படி பயன்படுத்தும் போது உங்கள் தலைமுடி மென்மையாகவும், ஆரோக்கியமாகவும், பளபளப்பாகவும் இருக்கும்.
அதிக கூந்தலை விரும்புவர்கள் வாரத்தில் இரண்டு தடவை சரி தலைக்கு எண்ணெய் வைத்து மசாஜ் செய்ய வேண்டும். அப்படி மசாஜ் செய்வதன் மூலம் முடியின் வேர்கால்கள் பலமடைந்து ஆரோக்கியமாக வளரும்.
முடியைப் பராமரிக்கும் போது குழந்தைப் போல பராமரிக்க வேண்டும். ஏனெனில் நீங்கள் அவசரம் அவசரமாக தலையை சீவும் போது உங்கள் முடி உடைந்து அடிவேர் வரைக்கும் பாதிப்படையும்.
முடியை நீளமாக வளர்க்க ஆசைப்படுபவர்கள் மாதத்திற்கு ஒரு முறை சரி நுனி முடியை வெட்டி ட்ரிம் செய்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் முடி வெட்ட வெட்ட வளரும் என்று சிகை அலங்கார நிபுணர்கள் கூறுகின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |