இறைச்சி, மீன், சிக்கன் இதில் எது சிறந்தது? அசைவப் பிரியர்களே உங்களுக்குத்தான்
சைவ உணவுகளை காட்டிலும் அசைவ உணவுகளின் மீதே பலருக்கும் விருப்பம் அளவுக்கு அதிகமாக இருக்கும். வீட்டில் ஞாயிற்றுக்கிழமைகளில் சைவ உணவுகள் சமைத்தால் அவ்வளவு தான். நிச்சயம் மிக பெரிய கலவரம் நடக்கும். இதற்கு மூல காரணமே அசைவத்தின் மீதுள்ள அளவுகடந்த காதல் தான். சிலருக்கு அசைவ உணவுகள் என்றால் செய்கின்ற வேலைகளை கூட கவனிக்காமல் வந்து விடுவர்.
சைவ வகை உணவுகளை காட்டிலும் அசைவ வகை உணவுகளில் பல்வேறு வகைகள் உண்டு. குறிப்பாக மீன், முட்டை, சிக்கன், காடை, இறால், இறைச்சி, நண்டு… இப்படி அடுக்கி கொண்டே போகலாம். ஆனால், இதில் முக்கிய கேள்வி என்னவென்றால், இவற்றில் எது ஆரோக்கியமானது? எதை சாப்பிட்டால் எந்த உடல்நல கோளாறுகளும் உண்டாகாது? என்பது தான்.
அசைவமா? சைவமா? பெரும்பாலும் சைவ உணவுகளை சாப்பிடுவதால் எந்த வித பிரச்சினைகளும் உடலில் ஏற்படாது. சில சமயங்களில் ஒவ்வாமை மட்டுமே ஏற்பட கூடும். ஆனால், இதற்கு எதிர்மாறானது அசைவ உணவுகள். அசைவ உணவுகளை அதிக அளவில் சாப்பிட்டு வந்தால் இதய நோய்கள் முதல் உடல் எடை கூடும் பிரச்சினை வரை ஏற்பட வாய்ப்புகள் அதிகம். கடல் உணவுகள் கடல் உணவுகள் அதிக ஆரோக்கியம் கொண்டவை.
இவற்றில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள், புரதசத்து, வைட்டமின் ஏ போன்றவை நிறைந்துள்ளது. இவற்றை வாரத்திற்கு 2 முறை சாப்பிட்டு வந்தால் ஆரோக்கியம் நிச்சயம் கூடும். பலனளிக்கும் மீன் மீன் போன்ற கடல் உணவுகளை சாப்பிட்டு வருவதால் மூளையின் திறன் அதிகரிக்கும். மேலும், கண் பார்வை சிறப்பாக இருக்கும். புற்றுநோய் அபாயத்தை தடுக்கும் ஆற்றல் கடல் உணவுகளுக்கு உள்ளது.
எலும்புகளின் தேய்மானத்தை குறைத்து, நிம்மதியான உறக்கத்தை தர கடல் உணவுகள் சிறந்த தேர்வாகும். சிக்கன் புரதசத்து அதிகம் கொண்ட அசைவ உணவுகளில் இவை முதன்மை வாய்ந்தவை. உடல் வளர்ச்சிக்கும், செயல் திறனுக்கும் இது நன்கு உதவும். ஆனால், இதை அதிக அளவு எடுத்து கொள்ள கூடாது.
குறிப்பாக பிராய்லர் வகை கோழிகளை முடிந்த வரை தவிர்த்தல் நல்லது. நாட்டு கோழிகளை சாப்பிட்டு வந்தால் உடல் ஆரோக்கியம் கூடும். சிறந்ததா? உடல் எடையை குறைக்க நினைப்போருக்கு சிக்கன் சிறந்த தேர்வு. மாட்டிறைச்சி, ஆட்டிறைச்சி போன்றவற்றை காட்டிலும் சிக்கன் உடல் எடையை குறைக்க உதவுகிறது. அதே போன்று கொழுப்பு, கார்ப்ஸ், புரதம், தாதுக்கள் போன்றவற்றிலும் சிக்கன் தான் சிறந்த தேர்வாகும். இறைச்சி இறைச்சியில் பல வகை உண்டு.
நாவிற்கு ருசியை அதிக அளவு தருகிறது என்பதற்காக இறைச்சிகளை அதிக அளவில் சாப்பிட்டு கொண்டே இருக்க கூடாது. குறிப்பாக மாட்டிறைச்சி, ஆட்டிறைச்சி, பன்றி இறைச்சி ஆகியவற்றை கூறலாம். பாதிப்புகள் இறைச்சி வகைகளில் சில பாதிப்புகள் உள்ளது. குறிப்பாக இவற்றில் அதிக உள்ள நிறையுற்ற கொழுப்புகள் உடலுக்கு அபாயங்களை உண்டாக்க கூடும்.
எனவே, ஆட்டிறைச்சி, மாட்டிறைச்சி போன்றவற்றை குறைந்த அளவு எடுத்து கொண்டால் ஆபத்து குறைவு.
எது சிறந்தது?
மீன், சிக்கன், இறைச்சி ஆகிய மூன்று வகையிலும் சிறந்தது எது என்பது தற்போது உங்களுக்கே தெரிந்திருக்கும். மற்றவற்றை காட்டிலும் மீன் தான் சிறந்த உணவாகும். வாரத்தில் 1 முறையாவது மீனை சாப்பிட்டு வந்தால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஆரோக்கியம் அதிகரிக்கும்…