முட்டை சாப்பிட்டால் கர்ப்பிணிப் பெண்களுக்கு ஆபத்தா? எத்தனை முட்டை சாப்பிடலாம்!
கர்ப்பிணிப் பெண்கள் முட்டை சாப்பிடலாமா என்ற கேள்வி எல்லோருக்கும் இருக்கும் இந்தக் குழப்பத்திற்கு உங்களுக்கு இந்த பதிவு சிறந்த தீர்வாக இருக்கும்.
ஒரு முட்டையில் எமது எலும்பின் ஆரோக்கியத்திற்கு தேவையான விட்டமின் Dமற்றும் கல்சியம் சத்துக்கள் அதிகமாக இருக்கிறது. ஆகவே தினமும் ஒரு முட்டையை எடுத்துக் கொண்டால் எமது உடம்பு பலமானதாக மாறும்.
Image: medical news today
மேலும், எமது உடலுக்குத் தேவையான வைட்டமின் ஏ, பி, சி, டி போன்ற வகையான சத்துக்களும் உள்ளன. அதுமட்டுமல்லாது தைதாக்சின் சுரக்கத் தேவையான அயோடின், பற்கள் மற்றும் எலும்புகளின் ஆரோக்கியத்துக்கு தேவைப்படும் பாஸ்பரஸ் போன்றவையும் முட்டையில் அதிகம் நிறைந்துள்ளது.
கர்ப்பிணிப் பெண்களுக்கு முட்டை
முட்டையில் இருக்கும் தாதுக்களும் வைட்டமின்களும் தாய்க்கும் குழந்தைகளுக்கும் அதிக ஊட்டச்சத்துக்களை கொடுக்கும். கர்ப்பிணிப் பெண்கள் நாளொன்றுக்கு 1 இலிருந்து 2 முட்டைகள் வரை சாப்பிடலாம்.
முட்டையில் இருக்கும் கோலின் அளவு அதிகமாக இருப்பதால் வயிற்றில் இருக்கும் கருவின் மூளை வளர்ச்சிக்கு அதிகம் உதவும் மேலும், குழந்தைக்கு வரும் பல நோய்களை தடுக்கும்.
Image: hipregnancy
முட்டையில் இருக்கும் மஞ்சள் கருவில் 70 கலோரிகள் இருப்பதால் கருவை சாப்பிடுவதை தவிர்க்கவும்.
முட்டையை தினமும் சாப்பிட்டால் உடலில் இருக்கும் கொழுப்பின் அளவு சமநிலையில் இருக்கும். கொலஸ்ட்ரோல் அளவு சாதாரணமாக இருப்பின் வாரத்தில் 3 இலிருந்து 4 முட்டைகளை சாப்பிடலாம்.
கர்ப்பிணிகள் கர்ப்ப காலத்தில் முட்டையை வேகவைத்து சாப்பிடுவது நல்லது ஏனெனில் முட்டையில் இருக்கும் தீய பக்ரீரியாக்கள் அழிந்துப் போகும்.
கர்ப்பிணிகள் வேகாத முட்டையை சாப்பிட்டால் வயிற்று வலியுடன் காய்ச்சல் ஏற்படும். சில நேரங்களில் கருகலைப்பும் ஏற்படலாம்.