இழந்த முடிகளை திரும்ப பெற இதை சாப்பிடலாம்: ஆய்வில் வெளியான புது தகவல்!
ஒருவரின் அழகை அதிகரித்து வெளிக்காட்டுவதில் முடி முக்கிய பங்கு வகிக்கிறது, ஆனால் தற்போது மாசுக்கள் நிறைந்த சுற்றுச்சூழல், வாழ்க்கை முறை மற்றும் பழக்கவழக்கங்களினால் முடி உதிர்வு ஏற்படுகின்றது.
இதனை எவ்வித பக்கவிளைவுகளுமின்றி இயற்கை வழிகளிலேயே சில உணவுகளை சாப்பிட்டு சரி செய்யலாம். அது மட்டுமில்லாமல் ஆண்களுக்கு ஏற்படும் முடி உதிர்வுப் பிரச்சினைகளையும், வலுக்கை தலை ஏற்படுவதற்கும் இந்த மரக்கறிகள் அதிகம் உதவுமாம்.
ஆய்வில் வெளியான தகவல்
முடி உதிர்தலுக்கு மிக முக்கிய காரணமே ஊட்டச்சத்து பற்றாக்குறைதான். இதனால் தினமும் தலைமுடிக்கு தேவையான அதிக ஊட்டச்சத்துக்களை கொண்ட உணவுகளை தினமும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
அந்த ஊட்டச்சத்து அதிகமுள்ள உணவுகளில் முக்கியமானது தான் இந்த காலிபிளவர் மற்றும் ப்ரக்கோலி. இவை இரண்டிலும் அதிக கனிமச் சேர்மமான சல்போராபோன் முடி உதிர்வை தடுத்தி தலைமுடியை வளர்ச்சி அடையச் செய்யும்.
இந்த சல்போராபோன் மூலப்பொருளானது தலைமுடிப் பராமரிப்புக்கு அதிகம் சேர்க்கப்படுவதாகும். மேலும், ஆண்ட்ரோஜெனெடிக் அலோபீசியா எனும் மாற்று மருந்தியல் சிகிச்சையாகவும் இந்த மூலப்பொருள் மிக அதிகம் பயன்படுத்தப்படுகிறது.
இந்த சல்போராபேன் எனும் மூலப்பொருள் முடி உதிரும் அறிகுறியை மிகவும் குறைக்கிறது. மேலும், தலைமுடியை தூண்டும் தன்மைக் கொண்டது.
இந்த காலிபிளவர் மற்றும் ப்ரக்கோலிகளை அதிகமாக உணவில் சேர்த்துக் கொண்டாலும் முடி உதிர்வுப்பிரச்சினை இல்லாமல் வளர்ச்சி அதிகரிக்கும் எனக் கூறப்படுகிறது.