முடி உதிர்வதற்கு நீங்களே காரணம்!
Hair Growth
By Sinduja
பெண்களுக்கு அழகே கூந்தல்தான். கூந்தல் நல்ல அடர்த்தியாகவும், நீளமாகவும் இருந்தால் யாருக்குதான் பிடிக்காது. ஆனால், இன்றைய இளம் தலைமுறையினருக்கு முடி உதிர்தல் அதிகமாக காணப்படுகின்றது.
யாரைப் பார்த்தாலும் முடி கொத்து கொத்தாக கொட்டுகிறது, இதற்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை என்று கவலையாக இருக்கின்றது என்பர்... முடி கொட்டுவதற்கு நிறைய காரணங்கள் உள்ளன.
அதிக மன அழுத்தம், சரியான உறக்கமின்மை, ஊட்டச்சத்துமிக்க உணவு உண்ணாமை என கூறிக்கொண்டே செல்லலாம். ஏன் இவ்வாறான ஒரு நிலைமை ஏற்படுகின்றது? அதற்கான இன்னும் சில காரணங்களை காணலாம்.
- உப்பு நீரில் குளித்தால் முடி உதிரும்.
- சரியான அளவு விட்டமின்கள், ஊட்டச்சத்துக்கள் இல்லாவிட்டால்கூட முடி அதிகமாக உதிரும்.
- அடிக்கடி தண்ணீர் மாற்றி குளிப்பது முடி உதிர்வுக்கு காரணமாகின்றது.
- தலைமுடியை சுத்தமாக வைத்துக் கொள்ளாவதவர்களுக்கும் முடி உதிரத் தொடங்கும்.
- அதிக சூடான நீரில் குளிப்பதும் ஒரு காரணமாகின்றது.
- தலையில் பெரும் பிரச்சினையாக இருக்கும் பொடுகு, பேன் என்பவற்றை முடிந்தளவு இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
- குளித்தவுடன் ஹேர் ட்ரையர் கொண்டு முடியைக் காயவைப்பதை தவிர்க்க வேண்டும்.
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US