பார்த்தாலே சாப்பிட தூண்டும் காலிபிளவர் 65! ஒருமுறை இப்படி செய்து பாருங்க
நடுத்தர வயதினர் மற்றும் வயதானவர்களுக்கு உடல் வலிமையை மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் காலிபிளவரில் வைட்டமின் ஏ, பி, இ, கே சத்துக்கள் நிறைந்துள்ளன.
தினமும் 90 கிராம் அளவுக்கு காலிபிளவர் சாப்பிடும்போது வைட்டமின் சி சத்து கிடைக்கும், ஆனால் 5 நிமிடத்திற்கு மேலாக காலிபிளவரை வறுக்கவோ, வாட்டவோ கூடாதாம், ஏனெனில் இதன் சத்துக்கள் அழிந்துவிடும்.
இதிலுள்ள நார்ச்சத்துக்கள் இதய நோய் வராமல் பாதுகாக்கிறது, மேலும் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியையும் தடுக்கிறது.
மெக்னீசியம், பொட்டாசியம், கால்சியம் போன்றவை இருப்பதால், தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் எதிர்ப்புசக்தி கிடைக்கும்.
இவ்வாறு பல நன்மைகள் கொண்ட காலிபிளவரை கொண்டு சுவையான 65 எப்படி செய்வது என பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
காலிபிளவர் – 250 கிராம்
மிளகாய் தூள் – 2 ஸ்பூன்
சிக்கன் சில்லி 65 – 2 ஸ்பூன்
சோள மாவு – 3 ஸ்பூன்
கடலை மாவு – 4 ஸ்பூன்
அரிசி மாவு – 2 ஸ்பூன்
தேவையான அளவு உப்பு
செய்முறை
முதலில் சுடுதண்ணீர் வைத்து, அதில் நறுக்கி வைத்துள்ள காலிபிளவரை போட்டுவிட்டு 10 விநாடிகளில் எடுத்துவிடவும்.
இதை ஒரு பாத்திரத்தில் போட்டுவிட்டு, மிளகாய் தூள், சில்லி 65 மசாலா, சோள மாவு, கடலை மாவு, அரிசி மாவு, உப்பு சேர்த்து நன்றாக கிளறவும்.
தண்ணீர் சேர்க்கத் தேவையில்லை, நன்றாக கிளறிவிட்டு அப்படியே 5 நிமிடங்களுக்கு வைக்கவும், ஏற்கனவே காலிபிளவரில் உள்ள தண்ணீரில் மசாலா நன்றாக ஒட்டிக்கொள்ளும்.
கடைசியாக 2 டீஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்து காலிபிளவர் மசாலாவை நன்றாக கிளறிவிடவும், இதை அப்படியே 10 நிமிடங்களுக்கு வைத்துவிடவும்.
பின்னர் கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும், காலிபிளவரை போட்டு பொறித்து எடுத்தால் சுவையான காலிபிளவர் 65 தயாராகிவிடும்.
ருசியான ரவா அப்பம்- 10 நிமிடத்தில் தயாராகிவிடும்