காடுபோல முடி வளர்க்க ஆசையா? அப்போ இன்னைக்கி குளிப்பதற்கு முன் இதை ட்ரைப் பண்ணி பாருங்க!
ஒருவரின் அழகை அதிகரித்து வெளிக்காட்டுவதில் முடி முக்கிய பங்கு வகிக்கிறது, ஆனால் தற்போது மாசுக்கள் நிறைந்த சுற்றுச்சூழல், வாழ்க்கை முறை மற்றும் பழக்கவழக்கங்களினால் முடி உதிர்வு ஏற்படுகின்றது.
இதனை எவ்வித பக்கவிளைவுகளுமின்றி இயற்கை வழிகளிலேயே சரி செய்யலாம். அந்தவகையில் தற்போது உங்கள் முடி உதிர்வை நிறுத்தி இரண்டே மாத்த்தில் முடி வளர வைக்கும் சிறந்த தீர்வினை கொடுக்கும் இந்த ஹேர் பெக்கை நீங்கள் செய்து பாருங்கள்.
செய்முறை
செம்பருத்தி இலையினை 1 கைப்பிடி எடுத்து சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும். கற்றாழையை சுத்தமாக அலசி கற்றாழை ஜெல்லை எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
பிறகு கற்றாழை ஜெல், செம்பருத்தி இலை, 1 கரண்டி ஆலிவ் எண்ணெய் என்பனவற்றை சேர்த்து பேஸ்ட் போல நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு அரைத்து எடுத்துக் கொண்ட பேக்கினை துணியால் சாறை மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு 2 கரண்டி கான்பிளவர் மாவை எடுத்து தேவையான தண்ணீர் ஊற்றி கட்டி இல்லாமல் கலந்துக் கொள்ள வேண்டும்.
இறுதியில் அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து செம்பருத்தி இலை சாற்றையும் கான்பிளவர் தண்ணீரையும் சேர்த்து நன்றாக சூடாக்கிக் கொள்ளவும். பிறகு அடுப்பை அனைத்து விட்டு தயாரித்த ஹேர் பேக்கை ஆற வைத்து எடுத்தால் தலைமுடி வளர்ச்சியை அதிகரிக்கும் ஹேர் பேக் தயார்.
பாவனை முறை
நீங்கள் தயாரித்த ஹேர் பேக்கை தலைக்கு அப்ளை செய்வதற்கு முன்னர் தேங்காய் எண்ணெய் கொஞ்சம் தடவிக் கொள்ளுங்கள்.
அதற்குப் பிறகு நீங்கள் தயாரித்து வைத்த ஹேர் பேக்கினை தலையில் இருக்கும் எல்லா முடிகளுக்கு படும்படி அப்ளை பண்ணிக் கொள்ள வேண்டும்.
பின்னர் 20 நிமிடம் கழித்து ஷாம்பு சேர்த்து தலைக் குளிக்கலாம்.
இவ்வாறு செய்வதானால் உங்கள் முடி நல்ல வளர்ச்சியடைத்து மாற்றம் பெறுவதை நீங்கள் பார்க்கலாம்.